கேள்வி-3: உணர்ச்சி என்றால் என்ன? உணர்ச்சி வசப்படுவது என்றால் என்ன? இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
1. உணர்ச்சி என்றால் என்ன? உணர்ச்சி என்பது மனிதரின் உள்ளத்தில் இயல்பாக எழும் மனநிலை அல்லது மன அசைவு ஆகும். அதாவது கீழ்கண்டவைகளை கவனியுங்கள்: சந்தோஷம் (Joy/Happiness) துக்கம் (Sadness) & வருத்தம் (Sorrow) கோபம் (Angry) பயம் (Fear) அன்பு (Love & Affection) இவை எல்லாம் உணர்ச்சிகள் ஆகும். இவை எல்லாம் பாவம் அல்ல. உணர்ச்சி நமக்கு வருவது தவறு அல்ல — அது மனித இயல்பு. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 'உணர்ச்சி'யை வெளிக்காட்டுகிறோம். உதாரணம்: இயேசு லாசருவின் மரணத்தில் அழுதார் (யோவான் 11:35) – இது உணர்ச்சி. தாவீது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உணர்ச்சி காட்டினான். 2. உணர்ச்சி – தேவன் கொடுத்த மனித இயல்பு தேவன் மனிதனை உருவாக்கும்போது, உணர்ச்சியில்லாத இயந்திரமாக உருவாக்கவில்லை. உணர்ச்சி கொண்ட மனிதராக உருவாக்கினார். சங்கீதம் 42:5 – “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?” சங்கீத புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'மனித உணர்ச்சி' வெளிப்பட்டு இருப்பதை காணலாம். மேலும் புலம்பல் புத்தகம் கூட உணர்ச்சியை வெளிப்படுத்தும் புத்தகமே! ஆதியாகமம...