Source: https://www.youtube.com/watch?v=ssgqEtGlZ8I 1. 1 கொரிந்தியர் 13வது அத்தியாயம்: பரிசுத்த வேதாகமத்தை ஆழமாக அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த வழி, ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் போது, முதலாவது அதிலிருந்து சில கேள்விகளை முதலாவது அறிந்துக்கொண்டு, அதன் பிறகு அந்த அத்தியாயத்தை படித்தால், அக்கேள்விகளுக்கான பதில் அவ்வத்தியாயத்தை படிக்கும் போது நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும், மேலும் முக்கியமான மற்றும் ஆழமான விவரங்கள் நாம் அறிந்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் மேலோட்டமாக படித்துக்கொண்டு சென்றுவிடுவோம். மேலும், ஒரு குழுவாக சேர்ந்து வேத ஆராய்ச்சி செய்யும் போதும், இந்த வேதமே வழி கேள்விகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். 1 கொரிந்தியர் 13வது அத்தியாயம்: கேள்விகள்: 1 ) இந்த அத்தியாயத்திற்கு நீங்கள் ஒரு பெயரை கொடுக்க விரும்பினால் என்ன பெயர் கொடுப்பீர்கள்? இதனை படிக்கும் போது, முழு அத்தியாயத்தையும் ஓரிரு வார்த்தையில் அடக்கும் வகையில், ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை கண்டுபிடியுங்கள், அதுவே இவ்வத்தியாயத்தின் பெயராக வைக்கலாம். 2) ஆவிக்குரிய வரங்களில் எவை...