மத்தேயு சுவிசேஷம் – வேத வினா போட்டி - Quiz from Matthew

 கார்னர்ஸ்டோன் ஜெப வீடு

டிசம்பர் 2017

மத்தேயு சுவிசேஷம் – வேத வினா போட்டி


கேள்விகள்: 50

மதிப்பெண்கள்: 50

பெயர்: ___________________________

1. இம்மானுவேல் என்பதற்கு அர்த்தம் என்ன?

A) இரட்சிப்பு B) சர்வ வல்லவர் C) தேவன் நம்மோடு இருக்கிறார் D) கர்த்தர் உதவி செய்வார்

2. யோவான் ஸ்நானகன் உடை எந்த மிருகத்தின் தோலினால் ஆனது?

A) ஆடு B) செம்மறி ஆடு C) மாடு D) ஒட்டகம்

3. இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின்பு, தேவ ஆவியானவர் இயேசுவின் மேல் எப்படி இறங்கினார்?

A) கழுகு B) காகம் C) குருவி D) புறா


4. இயேசு எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தார்?

A) 40 நாட்கள் B) 30 நாட்கள் C) 20 நாட்கள் D) 10 நாட்கள்


5. பிசாசு இயேசுவை எந்த நகரத்துக்கு கொண்டுச் சென்றான்.

A) பெத்லகேம் B) பரிசுத்த நகரம் C) சமாரியா D) யூதேயா


6. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று எந்த தீர்க்கதரிசி கூறினார் (மத்தேயு 4:15-16)

A) எரேமியா B) ஏசாயா C) தானியேல் D) எலியா


7. பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?

A) யோவான் B) அந்திரேயா C) யாக்கோபு D) யூதா


8. சமாதானம் பண்ணுகிறவர்கள் எப்படி இருப்பார்கள்?

A) பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்

B) தேவனிடத்தில் இரக்கம் பெறுவார்கள்

C) தேவனை தரிசிப்பார்கள்

D) தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


9. பழைய ஏற்பாட்டின்படி, தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், அவளுக்கு என்ன தரவேண்டும்?

A) பணம் B) சொத்தில் பங்கு C) பிள்ளைகள் D) தள்ளுதற்சீட்டு


10. மகா இராஜாவின் நகரம் எது?

A) சீயோன் B) எருசலேம் C) சமாரியா D) பரலோகம்


11. சரீரத்தின் விளக்கு எது?

A) இருதயம் B) கண் C) மூளை D) சிந்தை


12. முத்துக்களை எதற்கு முன் போடக்கூடாது?

A) நாய் B) கோழி C) பன்றி D) ஆடு


13. புத்தியுள்ளவன் தன் வீட்டை எதன் மீது கட்டுவான்.

A) மணல் B) மண் C) மலை அருகில் D) கன்மலை


14. இயேசுவைப் பார்த்து, ”ஆண்டவரே, உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றுச் சொன்னவன் யார்?

A) திமிர்வாதக்காரன் B) குருடன் C) செவிடன் D) குஷ்டரோகி


15. தன் வேலைக்காரனுக்காக வேண்டிக்கொண்ட நூற்றுக்கு அதிபதி எந்த பட்டணத்தைச் சேர்ந்தவன்?

A) எருசலேம் B) சீப்புரு C) கப்பர்நகூம் D) அந்தியோக்கியா


16. பன்றி கூட்டத்துக்குள் போகும்படி, இயேசுவிடம் அனுமதி கேட்ட பிசாசு பிடித்தவர்கள் எத்தனை பேர்?

A) இரண்டு பேர் B) ஐந்து பேர் C) லேகியோன் D) ஒருவர்


17. ஆயத்துறையில் உட்கார்ந்து இருந்தவன் யார்?

A) மத்தேயு B) மாற்கு C) லூக்கா D) யோவான்


18. இயேசுவிடம் “உம்முடைய சீஷர்கள் உபவாசியாமல் இருக்கிறார்களே!” என்று கேட்டவர்கள் யார்?

A) யோவானுடைய சீஷர்கள் B) பரிசேயர் C) சதுசேயர் D) வேதபாரகர்


19. “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் இவனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” என்று இயேசு யாரைக் குறித்து கூறினார்?

A) மோசே B) எலியா C) யோவான் ஸ்நானகன் D) தாவீது


20. பிசாசுகளின் தலைவன் யாரென்று பரிசேயர் கூறினர்?

A) சாத்தான் B) அந்திக் கிறிஸ்து C) பெயல்செபூல் D) லேகியோன்


21. யோனா எத்தனை நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தார்?

A) 3 நாட்கள்

B) இரவும் பகலும் 3 நாட்கள்

C) பகல் 3 நாட்கள்

D) இரவு 3 நாட்கள்


22. விதை உவமையில் நிலம் எதை குறிக்கிறது?

A) மண் B) உலகம் C) இருதயம் D) பாறை


23. யோவான் ஸ்நானகனை கொல்ல கட்டளையிட்டவன் யார்?

A) பிலாத்து B) ஏரோது C) பிரதான ஆசாரியன் D) ராஜா


24) ஜலத்தின் மேல் நடந்த சீடன் யார்?

A) பேதுரு B) யோவான் C) யாக்கோபு D) யூதா


25) ”பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல” – இந்த சம்பவத்தில் வரும் ஸ்திரீ (பெண்) யார்?

A) சமாரிய ஸ்திரீ B) எருசலேம் ஸ்திரீ C) யூதா ஸ்திரீ D) கானானிய ஸ்திரீ


26. ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் எத்தனை புருஷர்கள் சாப்பிட்டார்கள்?

A) 7000 பேர் B) 5000 பேர் C) 4000 பேர் D) 3000 பேர்


27. வரிப்பணம் கட்டுவதற்கு இயேசு பேதுருவிடம் “மீனின் வயிற்றில்” எத்தனை வெள்ளிப்பணம் இருக்கும் என்று கூறினார்?

A) 100 வெள்ளிப்பணம் B) 10 வெள்ளிப்பணம் C) 2 வெள்ளிப்பணம் D) 1 வெள்ளிப்பணம்


28. மனுஷ குமாரன் எதை இரட்சிக்க வந்தார்?

A) இஸ்ரேல் B) உலகம் C) கெட்டுப்போனதை D) மனிதர்களை


29. இயேசு கூறும் உவமையில்: ஒரு இராஜா தன்னிடத்தில் எத்தனை தாலந்து கடன் பட்டவனை மன்னிக்கிறார்?

A) 10,000 தாலந்து (பதினாயிரம்) B) 1000 தாலந்து (ஆயிரம்)

C) 100 தாலந்து D) 100 வெள்ளிப்பணம்


30. வீட்டு எஜமானாகிய ஒரு மனுஷன் தன் திராட்சை தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த (முதல்முறை) எந்த வேளையில் புறப்பட்டுப்போனான்?

A) காலை B) அதிகாலை C) 9 மணிவேளை D) 11 மணிவேளை


31. ’பெத்பகே’ என்ற ஊருக்கு அருகில் உள்ள மலை எது?

A) சீனாய் மலை B) சேயீர்மலை C) ஒலிவ மலை D) கொல்கொதா மலை


32. கழுதையையும், குட்டியையும் கொண்டுவர எத்தனை சீடர்கள் போனார்கள்?

A) ஒருவர் B) இரண்டு பேர் C) மூன்று பேர் D) நான்கு பேர்


33. என்னுடைய வீடு ______________________ எனப்படும்.

A) தேவாலயம் B) மேல் வீடு C) ஜெப வீடு D) எருசலேம்

34. வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே எதற்கு தலைக்கல்லாயிற்று?

A) வாசலுக்கு B) தேவாலயத்துக்கு C) சபையல் அறைக்கு D) மூலைக்கு


35. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?

A) பரிசேயர் B) வேதபாரகர் C) சதுசேயர் D) ஆசாரியர்


36. மத்தேயு 23ம் அதிகாரத்தில், ”மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே!” என்ற வார்த்தைகள் எத்தனை முறை வருகிறது?

A) 10 முறை B) 8 முறை C) 7 முறை D) 6 முறை


37. தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்ட பரகியாவின் குமாரன் யார்?

A) யோவான் ஸ்நானகன் B) சகரியா C) யாக்கோபு D) அனனியா


38. அக்கிரமம் மிகுதியாவதினால் அனேகருடைய __________ தனிந்துப்போம்.

A) பாசம் B) நேசம் C) விசுவாசம் D) அன்பு


39. பாழாக்குற அருவருப்பைக் குறித்து எந்த தீர்க்கதரிசி கூறியிருக்கின்றான்?

A) ஏசாயா B) எரேமியா C) தானியேல் D) மோசே


40. வானமும் பூமியும் ஒழிந்துப்போம், __________________ ஒழிந்துப்போவதில்லை.

A) தீர்க்கதரிசனம் B) ஆவியின் வரம் C) அன்பு D) என் வார்த்தைகளோ


41. யாருடைய காலத்தில் நடந்தது போல, மனிஷ குமாரனுடைய காலத்திலும் நடக்கும்?

A) நோவா B) ஆபிரகாம் C) தாவீது D) தானியேல்


42. தீவட்டிகளை பிடித்துக்கொண்டு புறப்பட்ட கன்னிகைகள் எத்தனைப்பேர்?

A) 5 பேர் B) 10 பேர் C) 8 பேர் D) 7 பேர்


43. பிரதான ஆசாரியன் பெயர் என்ன? (மத்தேயு 26:3)

A) காயினான் B) காய்பா C) கமாலியேல் D) திபேரியு


44. யூதாஸ் காரியேத்து இயேசுக் காட்டிக்கொடுக்க எத்தனை காசு பெற்றான்?

A) 30 காசு B) 30 பொன்காசு C) 30 வெள்ளிக்காசு D) 30 தாலந்து


45. பேதுரு எத்தனை தரம் இயேசுவை மறுதலித்தான்?

A) 5 தரம் B) 4 தரம் C) 2 தரம் D) 3 தரம்


46. இயேசு ”என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்று எந்த இடத்தில் கூறினார்?

A) ஒலிவ மலையில் B) கெத்சமனே தோட்டத்தில் C) எருசலேமில் D) பெத்தானியாவில்


47. இயேசுவிற்கு விரோதமாக சொல்லப்பட்ட பொய்சாட்சி என்ன?

A) தேவ குமாரன்

B) கிறிஸ்து

C) தேவாலயத்தை இடித்துப்போட்டு மூன்று நாளுக்குள் அதை கட்டுவேன்

D) நானே தேவன்


48. இயேசுவின் உடலை வாங்கிய யோசேப்பு, எந்த ஊரைச் சார்ந்தவன்?

A) எருசலேம் B) அந்தியோக்கியா C) அலேக்சந்திரியா D) அரிமத்தியா


49. தூதன் ஸ்திரியை நோக்கி: ”அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே __________________” என்று கூறினார்.

A) பிறந்தார் B) உயிர்த்தெழுந்தார் C) கலிலேயாவிற்கு போகிறார் D) மகிமையடைந்தார்


50. இயேசு கூறினார்: நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி _______________________, நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்துங்கள்.

A) பிதா பரிசுத்த ஆவி, இயேசுவின்

B) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்

C) பரிசுத்த ஆவி, குமாரன், பிதாவின்

D) யெகோவா, இயேசு, ஆவியானவரின்


Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?