ஆதியாகமம் 25-50 அத்தியாயங்கள் - வேத வினாத்தாள் (அக்டோபர் 2018)

 கார்னர்ஸ்டோன் ஜெப வீடு

அக்டோபர் 2018

ஆதியாகமம் – அத்தியாயங்கள் 26 - 50

வேத வினா போட்டி


கேள்விகள்: 50

மதிப்பெண்கள்: 50               பெயர்: ___________________________


1.    பெலிஸ்தரின் ராஜா பெயர் என்ன?

A) கோலியாத் B) தாவீது C) அபிமெலேக் D) ஆசகேல்


2)   ஈசாக்கு பஞ்சகாலத்தில் எந்த ஊரில் குடியிருந்தான்

A) எபிரோன் B) கேரார் C) எகிப்து D) எர்மோன்


3.    ஈசாக்கு விதை விதைத்து நூறு மடங்கு பலன் அடைந்த தேசம் எது?

A) கேரார் B) எபிரோன் C) எர்மோன் D) பெயர்செபா


4.    ஈசாக்கு கேராரின் பள்ளத்தாக்கில் எத்தனை துரவுகளை வெட்டினான்?

A) 2    B) 3    C) 4     D) 5


5.    ஈசாக்கு பெயர்செபாவில் வெட்டின துரவின் பெயர் என்ன?

A) ரெகொபோத் B) சித்னா C) ஏசேக் D) சேபா


6.    ஏசாவின் மனைவிகளின் பெயர்கள் என்ன?

A) பஸ்மாத், அஸ்லே B) யாகீன், கர்மீ C) இஸ்வி,பெரீயா D) யூதீத், பஸ்மாத்


7. பெத்துவேலுடைய வீடு எந்த ஊரில் இருந்தது?

A) பதான் அராமி B) பெயர்செபா C) எபிரோன் D) கேரார்


8. பூமியிலிருந்து வானம் வரை வைக்கப்பட்ட ஏணியில் தேவதூதர்கள் முதலில் ஏறினார்களா? அல்லது இறங்கினார்கள்?

A) இறங்கினார்கள் B) ஏறினார்கள் C) பறந்தார்கள் D) நடந்தார்கள்


9.    பெத்தேல் என்பதின் அர்த்தம் என்ன?

A) அப்பம் B) மன்னிப்பு C) தேவனின் ஆசிர்வாதம்  D) வானத்தின் வாசல்


10.   யாக்கோபு கீழ்திசையாரின் தேசத்தில் போய் சேர்ந்து, அங்கே வயல்வெளியில் ஒரு கிணறு அருகே எத்தனை ஆட்டு மந்தைகளைக் கண்டான்?

A) 3 ஆட்டு மந்தை B) 4 ஆட்டு மந்தை C) 5 ஆட்டு மந்தை D) 6 ஆட்டு மந்தை


11.   யாக்கோபிடம் நீ என் எலும்பும் என் மாமிசமும் மாணவன் என்று கூறியது யார்?

A) பெத்துவேல் B) லாபான் C) ஏசா D) ஈசாக்கு


12.   யாக்கோபு லேயாளை திருமணம் செய்த பின்பு எத்தனை நாட்களுக்குப் பிறகு ராகேலை திருமணம் செய்தான்?

A) 14 வருடங்கள் B) 7 வருடங்கள் C) 7 மாதங்கள் D) 7 நாட்கள்


13.   ரூபன் என்பதின் அர்த்தம் என்ன?

A) கர்த்தர் கேட்டார் B) நான் பாக்கியவதி C) என் புருஷன் என்னை நேசிப்பார் D) கர்த்தரை துதிப்பேன்


14.   லேயாளுக்கு யூதா எத்தனையாவது குழந்தை?

A) 5வது B) 4வது C) 3வது D) 6வது


15.   தாணின் அம்மா பெயர் என்ன?

A) லேயாள் B) ராகேல் C) பில்காள் D) சில்பாள்


16.   லாபான் யாக்கோபுடைய சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான்?

A) 10 முறை B) 12 முறை C) 20 முறை D) 15 முறை


17.   லாபானின் சுரூபங்களை (விக்கிரகங்களை) திருடிக்கொண்டவள் யார்?

A) சில்பாள் B) பில்காள் C) லேயாள் D) ராகேல்


18.   யாக்கோபு ஓடிப் போனான் என்று லாபானுக்கு எத்தனையாவது நாளில் அறிவிக்கப்பட்டது?

A) முதல் நாள் B) இரண்டாம் நாள் C) மூன்றாம் நாள் D) நான்காம் நாள்


19.    லாபான் ஏழு நாள் பிரயாணம் பண்ணி யாக்கோபை எந்த இடத்தில் கண்டுபிடித்தான்?

A) பதான் அராமி B) கீலேயாத் மலை C) எபிரோன் D) ஏதோம்


20.   யாக்கோபு லாபானின் வீட்டில் எத்தனை வருஷம் இருந்தான்?

A) 20 வருஷம் B) 14 வருஷம் C) 12 வருஷம் D) 10 வருஷம்


21. யாக்கோபு தேவ தூதர்களை கண்டபோது, இது தேவனுடைய சேனை என்றுச் சொல்லி, அந்த இடத்துக்கு என்ன பெயர் வைத்தான்?

A) மகனாயீம் B) மக்பேலா C) சீகேம் D) பெனியேல்


22. யாக்கோபு நான் தேவனை முகமுகமாய் கண்டேன், உயிர் தப்பி பிழைத்தேன் என்றுச் சொல்லி, அந்த இடத்துக்கு என்ன பெயர் வைத்தான்?

A) மக்னாயீம் B) பெனியேல் C) பெத்தேல் D) சுக்கோத்


23. தீனாளை தீட்டுப்படுத்தியவன் யார்?

A) ஏமோரின் B) சீகேம் C) சம்மா D) தேமான்


24. ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும் பட்டயத்தால் கொன்று போட்டவர்கள் யார் யார்?

A) ரூபன், தாண் B) சிமியோன், லேவி C) சிமியோன், தாண் D) சிமியோன், யூதா


25. ராகேல் அடக்கம் பண்ணப்பட்ட இடம் எது?

A) மக்பேலா B) சுக்கோத் C) எப்பிராத்தா அருகே D) பெயர்செபா அருகே


26. ஈசாக்கின் ஆயுசுக் காலம் எவ்வளவு?

A) 180 வருடங்கள் B) 157 வருடங்கள் C) 127 வருடங்கள் D) 110 வருடங்கள்


27. ஏதோமியரின் தகப்பன் யார்?

A) ஈசாக்கு B) யாக்கோபு C) ஏசா D) ஆபிரகாம்


28. ஏதோமியர் எந்த மலையில் குடியெறினர்?

A) கிலேயாத் மலை B) சேயீர் மலை C) மோரியா மலை D) கர்மேல் மலை


29. யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தன்னை வணங்கியதாக கூறும் போதும், இதில் எத்தனை நட்சத்திரங்கள் என்று கூறினான்?

A) 5 நட்சத்திரங்கள் B) 7 நட்சத்திரங்கள் C) 11 நட்சத்திரங்கள் D) 13 நட்சத்திரங்கள்


30. யோசேப்பு தன் சகோதரர்களை சீகேமிலே காணாமல், வேறு எந்த இடத்தில் கண்டுபிடித்தான்?

A) ஏதேர் B) தோத்தான் C) அர்பா D) திம்னா


31. யோசேப்பை அவன் சகோதரர்கள் எத்தனை காசுக்கு விற்றார்கள்?

A) 10 காசு B) 20 காசு C) 10 வெள்ளிக்காசு D) 20 வெள்ளிக்காசு


32. மீதியானியர் யோசேப்பை எகிப்தில் யாரிடத்தில் விற்றார்கள்?

A) பார்வோன் B) போத்திபார் C) மந்திரிமார் D) தலைவன்


33. யூதா திருமணம் செய்த கானானிய பெண்ணின் தகப்பன் பெயர் என்ன?

A) யூதீத் B) பஸ்மாத் C) மகலா D) சூவா


34. யூதாவின் மருமகள் பெயர் என்ன?

A) தாமார் B) அகோலிபாமா C) ரூத் D) மேசகா


35. தாமாரின் பிள்ளைகள் பெயர் என்ன?

A) ஏலா, ஏதேத் B) எயூஷ், மீசா  C) செப்போ, லோத்தான் D) பாரேஸ், சேரா


36. பானபாத்திரக்காரன் தான் கண்ட சொப்பனத்தில் திராட்சச் செடியில் எத்தனை கொடிகள் இருந்ததாக கூறினான்?

A) 5 கொடிகள் B) 4 கொடிகள் C) 3 கொடிகள் D) 2 கொடிகள்


37. யோசேப்பின் மனைவி பெயர் என்ன?

A) தமார் B) அகோலி பாமா C) ஆஸ்நாத் D) அரேலி


38. எகிப்திய பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயர் வைத்தான்?

A) சாப்நாத் பன்னேயா B) பெல்தெஷாத்சார் C) ஆபேத்நேகோ D) மீஷாவேல்


39. ’எப்பிராயீம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

A) தேவன் என் சத்தத்தை கேட்டார்  B) தேவன் என்னுடனே வாசம் பண்ணுவார்

C) தேவன் என்னோடு இருப்பார்  D) தேவன் என்னை பலுகப்பண்ணினார்


40. யோசேப்பு தன் சகோதரர்களை வேவுக்காரர்கள் என்றுச் சொல்லி, எத்தனை நாட்கள் காவலில் வைத்தான்?

A) 2 நாட்கள் B) 3 நாட்கள் C) 4 நாட்கள் D) 5 நாட்கள்


41. யாக்கோபிடம் ‘பென்யமீனை எங்களோடே எகிப்துக்கு அனுப்பும்’ என்று மன்றாடியவன் யார்?

A) ரூபன் B) யூதா C) சிமியோன் D) லேவி


42. யோசேப்பின் பானபாத்திரம் யாருடைய சாக்குபையில் கண்டுபிடிக்கப்பட்டது?

A) யூதா B) தாண் C) சிமியோன் D) பென்யமீன்


43. யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் இன்னும் தேசத்தில் எத்தனை வருஷம் பஞ்சம் இருக்கும் என்று கூறினான்?

A) 2 வருஷம் B) 4 வருஷம் C) 5 வருஷம் D) 7 வருஷம்


44. எகிப்துக்கு போன யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் எத்தனைப் பேர்?

A) 70 பேர் B) 66 பேர் C) 60 பேர் D) 74 பேர்


45. யோசேப்பு தன் சகோதரர்களில் எத்தனை பேரை பார்வோனுக்கு  முன்பாக நிறுத்தினான்?

A) 7 பேரை B) 5 பேரை C) 8 பேரை D) 10 பேரை


46. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை வருஷம் உயிரோடு இருந்தான்?

A) 12 வருஷம் B) 14 வருஷம் C) 15 வருஷம் D) 17 வருஷம்


47. யாக்கோப்புடைய ஆயுசு நாட்கள் மொத்தம் எவ்வளவு?

A) 170 வருஷம் B) 163 வருஷம் C) 147 வருஷம் D) 130 வருஷம்


48. பாலச் சிங்கம் யார்?

A) யூதா B) லேவி C) தாண் D) பென்யமீன்


49. கனி தரும் செடி யார்?

A) ரூபன் B) யோசேப்பு C) மனாசே D) எப்பிராயீம்


50. யோசேப்பு ஆயுசு நாட்கள் எத்தனை?

A) 110 வருஷம் B) 115 வருஷம் C) 137 வருஷம் D) 147 வருஷம்

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?