ஆதியாகமம் 1-25 – வேத வினா போட்டி - Quiz from Genesis

ஆதியாகமம் 1-25


கார்னர்ஸ்டோன் ஜெப வீடு

பெங்களுர்

ஏப்ரில் 2018

ஆதியாகமம் 1-25 அத்தியாயங்கள்

வேத வினா போட்டி



கேள்விகள்: 50

மதிப்பெண்கள்: 50

பெயர்: ___________________________

1. இருள் எதின் மேல் இருந்தது?

A) பூமியின் மேல் B) வானத்தின் மேல் C) ஜலத்தின் மேல் D) ஆழத்தின் மேல்

2. ஆகாய விரிவை தேவன் எதிலிருந்து உண்டாக்கினார்?

A) பூமியின் மத்தியில் B) வானத்தின் மத்தியில் C) ஜலத்தின் மத்தியில் D) வெளிச்சம்


3. மூடுபனி எங்கிலிருந்து எழும்பி, பூமியெல்லாம் நனைத்தது?

A) பூமியிலிருந்து B) வானத்திலிருந்து C) தேவனிடமிருந்து D) ஏதேனிலிருந்து


4. ஏதேன் தோட்டத்தை தேவன் எந்த திசையில் உண்டாக்கினார்?

A) கிழக்கு B) மேற்கு C) தெற்கு D) வடக்கு


5. ஏதேனிலிருந்து ஓடும் நாலாம் ஆற்றின் பெயர் என்ன?

A) பைசோன் B) கீகோன் C) இதெக்கேல் D) ஐபிராத்து


6. ஆதாம் எத்தனை வருடம் உயிரோடு இருந்தான்?

A) 900 B) 910 C) 920 D) 930


7. நோவா தன் காலத்தில் எப்படிப்பட்டவனாக இருந்தான்?

A) நீதிமான் B) உத்தமன் C) நீதிமானும் உத்தமனுமாய் D) தேவனுக்கு கீழ்படிந்தவனாய்


8. நோவா எந்த மரத்தினால் பேழையை உண்டு பண்ணினான்?

A) ஒலிவ மரம் B) அத்தி மரம் C) கொப்பேர் D) சீத்தீம்


9. பூமியின் மேல் எத்தனை நாள் பெருமழை பெய்தது?

A) நாற்பது நாள் இரவும் பகலும் B) நாற்பது நாள் C) நாற்பது நாள் பகல் D) நாற்பது நாள் இரவு


10. ஜலம் வடிந்து பேழை எந்த மலையின் மேல் தங்கிற்று?

A) ஒலிவ மலை B) சீனாய் மலை C) சீயோன் மலை D) அரராத் மலை


11. புறாவை பேழையிலிருந்து வெளியே விட்டபோது எந்த மரத்தின் இலையை கொண்டு வந்தது?

A) அத்தி இலை B) ஒலிவ இலை C) அரசமர இல்லை D) காட்டு அத்தி இலை

12. மாம்சத்தின் உயிர் எதில் இருக்கிறது?

A) இருதயம் B) இரத்தம் C) மூளை D) சுவாசம்


13. இனி பூமியை அழிக்க ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று தேவன் ”எதை உடன்படிக்கையின் அடையாளமாக வைத்தார்?”

A) மேகம் B) இடி C) வானவில் D) மழை


14. காயீன் கட்டிய பட்டணத்தின் பெயர் என்ன?

A) எருசலேம் B) ஏதேன் C) ஏனோக்கு D) எகிப்து


15. நோவா எத்தனை வருஷம் உயிரோடு இருந்தான்?

A) 900 B) 920 C) 940 D) 950


16. கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தவன் யார்?

A) சிம்சோன் B) ஏசா C) யாக்கோபு D) நிம்ரோத்


17. நோவாவின் பேழையில் நுழைந்து பாதுகாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

A) 7 பேர் B) 8 பேர் C) 5 பேர் D) 10 பேர்

18. சுத்தமான மிருகங்கள் மற்றும் பறவைகளில் எத்தனை ஜோடிக்கள் நோவாவின் பேழைக்குள் கொண்டுச் செல்லப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்?

A) ஏழு B) எட்டு C) நான்கு D) பத்து


19. தேராகுக்கு எத்தனை பிள்ளைகள்

A) 2 பேர் B) 3 பேர் C) 4 பேர் D) 5 பேர்


20. லோத்து சிறை பிடிக்கப்பட்டபோது, அவரை காப்பாற்ற ஆபிரகாம் எத்தனை வேலைக்காரர்களை கொண்டுச் சென்றார்?

A) 310 B) 318 C) 317 D) 360


21. தேராகுடைய பேரன் பெயர் என்ன?

A) ஆபிரகாம் B) நாகோர் C) ஆரோன் D) லோத்து


22. ஆரானைவிட்டு புறப்பட்டபோது ஆபிராமுக்கு வயது எவ்வளவு?

A) 80 B) 75 C) 70 D) 67


23. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். – இந்த துஷ்டமனுஷன் யார்?

A) காயீன் B) ஆபேல் C) சாத்தான் D) இஸ்மவேல்


24. பஞ்சம் கொடியதாக இருந்ததால், ஆபிராம் எந்த தேசத்துக்கு போனான்?

A) கானான் B) சோதோம் C) எகிப்து D) காதேஸ்


25. கர்த்தருடைய தோட்டத்தைப் போல இருந்த இடம் எது?

A) எகிப்து B) சோதோம் கொமோரா C) ஆரான் D) கனான்


26. ”கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்று லோத்து சொன்ன போது, அதனை பரியாசம் பண்ணுகிறதாக (வேடிக்கையாக) கண்டவர்கள் யார்?

A) லோத்துவின் மனைவி B) லோத்துவின் மருமகன்களாக ஆகப்போகிறவர்கள்

C) லோத்துவின் மகள்கள் D) சோதோம் கொமோரா பட்டண மக்கள்


27. தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜா யார்?

A) மெல்கிசேதேக் B) அபிமெலேக் C) அம்மோன் D) மோவாப்


28. கர்த்தர் ஆபிராமை நோக்கி ‘அவன் சந்ததியார் அந்நிய தேசத்தில் எத்தனை வருடங்கள் உபத்திரப்படுவார்கள்’ என்று கூறினார்?

A) 450 வருடங்கள் B) 400 வருடங்கள் C) 420 வருடங்கள் D) 430 வருடங்கள்


29. சாராயின் அடிமைப் பெண் யார்?

A) மில்க்காள் B) கில்க்கால் C) ஆகார் D) கேத்துராள்


30. ஆபிராமுக்கும் ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் பெயர் என்ன?

A) இஸ்மவேல் B) இஸ்ரவேல் C) லோத்து D) ஈசாய்


31. சாராள் என்பதின் அர்த்தம் என்ன?

A) ஜாதிகளின் தாய் B) உலகத்தின் தாய் C) இஸ்ரவேலின் தாய் D) விசுவாசத்தின் தாய்


32. இஸ்மவேலுக்கு விருத்தசேதனம் பண்ணும் போது வயது எவ்வளவு?

A) 12 வயது B) 13 வயது C) 15 வயது D) 16 வயது


33. ஆபிரகாமுக்கு 3 புருஷர்கள் தரிசனமான இடம் எது?

A) கானான் B) சோதோம் C) மம்ரே D) காதேஸ்


34. சோதோமில் கடைசியாக எத்தனை நீதிமான்கள் இருந்தால், அதை அழிப்பதில்லை என்று தேவன் சொன்னார்?

A) 50 நீதிமான்கள் B) 40 நீதிமான்கள் C) 30 நீதிமான்கள் D) 10 நீதிமான்கள்


35. ஆபிரகாம் அபிமெலேக்கிடம் “இவ்விடத்தில் __________ இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்” என்று கூறினான். கோடிட்ட இடத்தை நிறப்புக.

A) மரியாதை B) தெய்வ பயம் C) அன்பு D) நம்பிக்கை


36. சாராளின் குமாரன் பெயர் என்ன?

A) இஸ்மவேல் B) ஈசாக்கு C) ஏசா D) யாக்கோபு


37. ஆகாரும் அவள் பிள்ளையும் எந்த வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர்?

A) சீனாய் B) பாரான் C) பெயர்செபா D) காதேஸ்


38. ஆபிரகாம் தன் மகனை பலியிடுவதற்கு சென்ற இடத்தின் பெயர் என்ன?

A) மோரியா B) பெயர்செபா C) சீனாய் D) எபிரோன்


39. யேகோவாயீரே என்பதின் அர்த்தம் என்ன?

A) கர்த்தர் பார்த்துக்கொள்வார் B) கர்த்தர் கேட்பார் C) கர்த்தருடைய பர்வதம்

D) கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்


40. சாராள் எந்த வயதில் மரணம் அடைந்தாள்?

A) 127 வயதில் B) 128 வயதில் C) 130 வயதில் D) 120 வயதில்


41. எந்த ’நிலத்தின் குகையில்’ சாராள் அடக்கம் செய்யப்பட்டாள்?

A) மம்ரே B) கானான் C) கீரியாத் அர்பா D) மக்பேலா


42. ரெபேக்காளின் தந்தை பெயர் என்ன?

A) பெத்துவேல் B) நாகோர் C) லோத்து D) லாபான்


43. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும். நீர் வெளியே நிற்பானேன் என்று ஆபிரகாமின் ஊழியக்காரரைப் பார்த்து அழைத்தவர் யார்?

A) லோத்து B) நாகோர் C) பெத்துவேல் D) லாபான்


44. ஈசாக்கு தியானம் பண்ணும் வேளை _________

A) காலை B) அதிகாலை C) மத்தியானம் D) சாயங்காலம்


45. சாராளின் மரணத்துக்கு பிறகு, ஆபிரகாம் விவாகம் செய்துக்கொண்ட பெண்ணின் பெயர் என்ன?

A) ஆகார் B) கேத்துராள் C) மில்க்காள் D) மிஷ்மா


46. ஆபிரகாம் எத்தனை வருடங்கள் உயிரோடு இருந்தார்?

A) 150 வருடங்கள் B) 165 வருடங்கள் C) 170 வருடங்கள் D) 175 வருடங்கள்


47. ஈசாக்கின் மகன்களில் குணசாலியும், கூடாரவாசியுமாக இருந்த மகன் யார்?

A) ஏசா B) யாக்கோபு C) இஸ்மவேல் D) யோசேப்பு


48. மனிதனை தேவன் எத்தனையாவது நாளில் உண்டாக்கினார்?

A) முதல் நாளில் B) இரண்டாவது நாளில் C) ஆறாவது நாளில் D) ஏழாம் நாளில்


49. ஆதியாகமம் 3:15ன்படி, ஸ்திரியின் வித்து யார்?

A) காயின் B) ஆபேல் C) இயேசுக் கிறிஸ்து D) ஆபிரகாம்


50. ”எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது”, என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்?

A) காயீன் B) ஆபேல் C) ஏசா D) யாக்கோபு

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?