கேள்வி/Tamil Question-1: சுவிசேஷகர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டுமா? கொடுக்கவேண்டாமா? அல்லது நாம் சுவிசேஷகர்களுக்கு தசமபாகம் கொடுக்கலாமா?


ஒரு யூடியுப் வீடியோவிற்கு வந்த 'தசமபாகம்' பற்றி வாசகரின்(@holyspirit.39-27) கேள்வி.

https://www.youtube.com/shorts/0Sz0oO8VbNA

Brother I want question evangelist dashama bhago kudukanum hudka kodada?

பதில்: இந்த கேள்வி தங்கிலீஸில் (தமிழை ஆங்கிலத்தில்) எழுதியுள்ளதால், சரியாக புரியவில்லை. இதனை சரிப்படுத்தினால், கீழ்கண்ட கேள்வி வரும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: சுவிசேஷகர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டுமா? கொடுக்கவேண்டாமா? அல்லது நாம் சுவிசேஷகர்களுக்கு தசமபாகம் கொடுக்கலாமா? என்று கருதிக்கொண்டு எனக்கு தெரிந்த பதிலை தருகிறேன். இதனை வாசகர்கள் பைபிளோடு சரி பார்க்கவும்.

1) முதலாவதாக, தசமபாகம் புதிய ஏற்பாட்டுக்கு/கிறிஸ்தவர்களுக்கு உரியதல்ல:

தேவாலயத்துக்கு/ஆசாரியர்களுக்கு தசமபாகம் கொடுப்பது, பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளையாகும். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் 'தசம்பாகத்தை' சபைக்கு/மேய்ப்பருக்கு கொடுக்கவேண்டும் என்று நேரடி கட்டளையோ மறைமுக கட்டளையோ இல்லை.

“இல்லை, இல்லை, புதிய ஏற்பாட்டிலும் தசம பாகம் கொடுக்கும்படி இயேசு கட்டளையிட்டுள்ளாரே” என்று சிலர் சொல்லலாம், அவர்கள் குறிப்பிடும் வசனங்கள் இவைகளே: மத்தேயு 23:23 & லூக்கா 11:42

Luke 11:42: 

Woe to you Pharisees, because you give God a tenth of your mint, rue and all other kinds of garden herbs, but you neglect justice and the love of God

Matthew 23:23, 

“Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You give a tenth of your spices—mint, dill and cumin. But you have neglected the more important matters of the law—justice, mercy and faithfulness. You should have practiced the latter, without neglecting the former

லூக்கா 11:42

பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

மத்தேயு 23:23 

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்

இந்த இடத்திலே, கிறிஸ்தவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை, மாறாக, தசமபாகம் சரியாக கொடுக்கும் யூதமத தலைவர்கள், தசமபாகத்தை கொடுக்கிறார்கள், அதுவும் சிறிய பொருட்களில் கொடுக்கிறார்கள், ஆனால் விசேஷித்த தேவனின் கட்டளைகளாகிய நீதி, இரக்கம், விசுவாசம் போன்றவற்றை விட்டுவிட்டீர்களே என்று அவர்களை கடிந்துக்கொள்கிறார். இரண்டையும் செய்யச்செல்லி, யூதர்களுக்குச் சொல்கிறார். 

இங்கு தசமபாகம் கிறிஸ்தவர்கள் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவில்லை.

இரண்டாவதாக, எபிரேய கடிதத்திலும், தசமபாகம் பற்றிய வசனம் வரும்:

எபிரெயர்  7:17

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

இந்த முழூ அத்தியாயத்திலும், மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தார் என்று சொல்லப்படும், ஆனால், முழு அதிகாரத்தின் சாராம்சம் பார்க்கும் போது, இயேசு மெல்கிசேதேக்கைக் காட்டிலும் பெரிய ஆசாரியராக இருக்கிறார் என்பதை காட்டுவதாக இருப்பதை காணமுடியும்.

இங்கும், கிறிஸ்தவர்கள் ஆபிரகாமைப்போல தசமபாகம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்படவில்லை, பதிலாக இயேசுவின் ஆசாரியத்துவம் பற்றிய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக இவ்வசனங்கள் எழுதப்பட்டுள்ளன (எபிரேயர் 7ம் அதிகாரத்தை முழுவதுமாக படிக்கவும்).

அப்படியானால், கிறிஸ்தவர்கள் எப்படி ஊழியத்துக்கு உதவவேண்டும்? எப்படி காணிக்கை செலுத்தவேண்டும்?

கர்த்தரின் ஊழியத்திற்காக நிச்சயம் கிறிஸ்தவர்கள் காணிக்கை செலுத்தவேண்டும்! ஆனால், அதனை அவனவன் மனவிருப்பத்தின்படி, கட்டாயம் இல்லாமல் கொடுக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது.

2 கொரிந்தியர் 9:7

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

ஒரு உண்மையான ஊழியக்காரருக்கு, மிஷனரி ஊழியத்திற்கு, கர்த்தரின் காரியங்களுக்கு, நாம் ஒவ்வொரு வாரமும் சென்று ஆராதிக்கும் சபைக்கு, உற்சாகமாய் கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுப்பது, 10ல் ஒரு பாகமாகிய தசம பாகத்தை கொடுக்கலாமா?

இல்லை, தசம பாகம் இல்லை, அதற்கு கீழாகவும் கொடுக்கலாம், மேலாகவும் கொடுக்கலாம். அது உங்கள் விருப்பம், கட்டாயமில்லை. ஒரு சதவிகிதமும் தரலாம், 50 சதவிகிதமும் தரலாம். எவ்வளவு என்பது கேள்வியில்லை, 'ஊழியத்தின் தேவைக்கு ஏற்ப, உங்கள் மனவிருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கவேண்டும்'.

பணமில்லாமல் எப்படி ஊழியம் நடக்கும்? 

நற்செய்தியை பரப்பவும் நமக்கு பணம் வேண்டுமே!

ஆனால், கிறிஸ்தவர்கள் காணிக்கை கொடுக்கும் போது, 'உண்மையான ஊழியருக்கும், ஊழியத்திற்கும் கொடுக்கவேண்டும், தேவையுள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டும்'.

எனவே, புதிய ஏற்பாட்டின் படி, எவ்வளவு என்பது கணகில்லை, எப்படி என்பது தான் கணக்கு! மனவிருப்பத்தின் படி, 1% லிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், சிலரது செய்திகளை கேட்டு, ஏமாற்றப்பட்டு, கடன் வாங்கி கொடுக்காதீர்கள், நீங்களே கடனில் மூழ்கி பிரச்சனையில் இருக்கும் போது, கடனை தீர்க்காமல், சபைக்கு கொடுக்காதீர்கள். உங்கள் கடனை தீர்த்துவிட்டு, அதன் பிறகு கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதத்திலிருந்து மனவிருப்பத்தின்படி (கட்டாயமல்ல), உற்சாகமாய், ஞானமாய் (கவனிக்கவும் ஞானமாய்) கர்த்தருக்கு ஊழியத்துக்கு கொடுங்கள்.

கேள்வி: விசுசேஷகர்கள் தசமபாகம் செலுத்தவேண்டுமா?

இதுவரை கண்ட விவரங்களின் படி, தசமபாகம் என்பது கிறிஸ்தவர்களுக்கு இல்லை, அது 'காணிக்கை' என்று நாம் அழைக்கலாம். அதுவும் 10% என்பது இல்லை, அது எவ்வளவாகவும் இருக்கலாம்.

சுவிசேஷகரானாலும் சரி, பாஸ்டரானாலும் சரி, மிஷனரியானாலும் சரி, இன்னும் எந்த ஊழியம் செய்பவரானாலும் சரி, அவரால் முடிந்த அளவு, மற்ற ஏழை ஊழியர்களுக்கும், நல்ல ஊழியங்களுக்கும் அவர்களும் 'காணிக்கை' கொடுக்கவேண்டும்.

சபைக்கு வரும் காணிக்கைகளில், ஒரு பாகத்தை எடுத்து சமுதாய நன்மைக்காகவும், மிஷனரிகளுக்கும், ஏழைகளுக்கும், விதவைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் சபை பாஸ்டர்கள் கொடுக்கிறார்கள், கொடுக்கவேண்டும்.

இதே போல, ஒரு சுவிசேஷகருக்கு வரும் காணிக்கையில் அவரும் ஒரு பகுதியை (தசமபாகம் அல்ல), அவர் மற்றவர்களுக்கு காணிக்கை செலுத்தவேண்டும், அதுவும் மனவிருப்பத்தின்படி.

கேள்வி: நாம் போகும் சபைக்கு தசமபாகம் செலுத்தாமல், மற்ற ஊழியர்களுக்கு, சுவிசேஷகர்களுக்கு கொடுக்கலாமா?

மறுபடியும் மனதில் வைக்கவும், தசமபாகம் அல்ல, 'காணிக்கை'.முதலாவது நம் சபையை நடத்தும் ஊழியருக்கும், ஊழியரையும் நாம் தான் தாங்கவேண்டும்.

எனவே, நம்முடைய முதலாவது காணிக்கை, நம் சபைக்கு மட்டுமே. நாம் உட்கார்ந்து வாராவாரம் ஆராதனை செய்யும் இடத்துக்கு யார் வாடகை செலுத்துவார், யார் மின்சார கட்டணம் செலுத்துவார், நம் மேய்ப்பாரை யார் போஷிப்பார் (கர்த்தர் தான் போஷிப்பார், அதனை விசுவாசிகள் கொண்டுபோஷிப்பார்)? நாம் தான் அதனை செய்யவேண்டும்.

நம் சபையின் தேவைகள் பூர்த்தியான பிறகு, அல்லது நம் சபைக்கும், போதகருக்கும் போதுமான அளவு காணிக்கை உண்டு என்று நாம் கண்டால், கர்த்தரின் வழி நடத்துதலின் படி, வேறு ஏழை ஊழியங்களை தாங்கலாம்,  நாம் தாங்கவேண்டும்.

ஆக, பணம் என்பது உங்களின் உரிமை, உங்களுக்கு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதம். அதனை சரியாகவும், ஞானமாகவும் பயன்படுத்தவேண்டும். ஏழை விசுவாசிகளின் காணிக்கைகளில் 'உல்லாச வாழ்க்கை வாழும் ஊழியர்கள், நற்செய்தி பணிக்கு அதனை பயன்படுத்தாமல், பணத்தை வீண் செலவு செய்யும் ஊழியர்கள், ஆடம்பர செலவு செய்யும் ஊழியர்களின் கைகளில் கொடுத்து, ஏமாறவேண்டாம்' என்று கேட்டுக்கொள்கிறேன்.

கர்த்தரிடம் இதற்கும் நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். 'உன் சபை போதகர், சபை காணிக்கையை ஊழியம் செய்யாமல், தன் ஆடம்பர செலவுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்று உனக்கு பல வகைகளில் நான் (கர்த்தர்) எடுத்துக்காட்டிய பிறகும், நீ தொடர்ந்து அவருக்கே பணத்தை கொடுத்தது ஏன்?' நான் உனக்கு ஞானத்தை அளிக்கவில்லையா? என்று கர்த்தர் கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

Short: https://www.youtube.com/shorts/0Sz0oO8VbNA 



Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?