2 கொரிந்தியர் 10: ஒரு உண்மையான ஊழியரின் ஆவிக்குரிய யுத்தம், மற்றும் கர்த்தர் கொடுத்த‌ அதிகாரம்

அன்பான தேவசபையே,

இன்று நாம் பார்க்கப் போகும் வசனம் மிகவும் ஆழமானது. இது ஒரு சாதாரண போதனை அல்ல… இது ஒரு ஆவிக்குரிய போரின் அழைப்பு!

இந்த அதிகாரத்தில் கொரிந்திய சபையில் சில 'கள்ள ஊழியர்கள்' அப்போஸ்தலர் பவுலடியார் பற்றி கீழ்கண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்:

  • அவரை சிலர் குறை கூறினர்

  • பவுலடியார் எழுதும் போது தைரியமாக தெரிகிறார், ஆனால் அவரை நேரில் பார்த்தால், பலவீனமாக காணப்படுகிறார்

  • பவுலடியாரின் வெளிப்படையான தோற்றத்தை பார்த்து அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள்?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பவுலடியார், பதில் எழுதுகிறார்:

  • நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல” (2 கொரிந்தியர் 10:3)

இதுதான் உண்மையான ஊழியக்காரனின் அடையாளம்!

1. உண்மையான ஊழியக்காரன் — தாழ்மையோடு நடப்பான் (வ.1)

  • உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும்பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு...

தாழ்மை = பலவீனம் அல்ல

சுய கட்டுப்பாடு உள்ளவர்களிடம் இருக்கும் ஒரு சக்தி/பெலன்

உலகம் சொல்லும்:

  • நாம் அதிகம் சத்தம் போட்டால் தான் மற்றவர்கள் 'நமக்கு பலமுள்ளது' என்று நம்புவார்கள்

  • அடிக்கடி கோபத்தை காட்டினால் தான் 'நமக்கு அதிகாரம்' உண்டு என்று நம்புவார்கள்

இது ஒரு தவறான புரிதலாகும்!

தேவன் சொல்கிறார்:

  • அமைதியான / சாந்தமான‌ ஆவி தான் நமக்கு இருக்கும் மிகப்பெரிய பெலன்!

2. உண்மையான ஊழியக்காரன் — மாம்சத்தில் போராட மாட்டான் (வ.3)

நாங்கள் . . . மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல

நம்முடைய போராட்டம்:

  • மனிதர்களுக்கு எதிராக அல்ல

  • குடும்பத்துக்கு எதிராக அல்ல

  • சபைக்குள் உள்ளவர்களுக்கு எதிராக அல்ல

நம்முடைய உண்மையான எதிரி:

  • தவறான சித்தனை

  • பொய் நம்பிக்கை

  • பாவத்தின் அடிமைத்தனம்

நம்முடைய‌ பிரச்சனை என்ன தெரியுமா?

  • நாம் தவறான போராட்டம் செய்கிறோம்!

  • மனிதரை தாக்குகிறோம்

  • வாக்குவாதம் செய்கிறோம்

  • சண்டை போடுகிறோம்

இது தேவனுடைய வழி இல்லை

தேவனுடைய வழி — ஜெபம்!

3. உண்மையான ஆயுதங்கள் — ஆவிக்குரியவை (வ.4–5)

  • எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது

தேவ பெலனுள்ள ஆயுதங்கள் எவை?

  • ஜெபம்

  • தேவனுடைய வார்த்தை

  • விசுவாசம்

  • பரிசுத்த ஆவியின் வல்லமை

இவை என்ன செய்கிறது?

  • கோட்டைகளை இடிக்கிறது

  • வாதங்களை அழிக்கிறது

  • சிந்தனைகளை அடக்குகிறது

அதி முக்கியமானவைகள்:

மிகப்பெரிய போர்க்களம் — மனது!

  • பயம்

  • சந்தேகம்

  • தாழ்வு உணர்வு

  • பெருமை

இவை எல்லாம் கோட்டைகள்!

4. கீழ்ப்படிதல் இல்லாமல் அதிகாரம் இல்லை (வ.6)

நீங்கள் கீழ்ப்படிதலில் வாழவில்லை என்றால்

நீங்கள் அதிகாரத்தில் நடக்க முடியாது!

உண்மையான ஊழியக்காரர்:

  • தேவனுக்கு கீழ்ப்படிவார்

  • ஒழுக்கத்தில் வாழ்வார்

  • பரிசுத்தத்தில் நடப்பார்

இன்று பலர்:

  • அதிகாரம் வேண்டும் என்று போராடுவார்கள்

  • ஆனால் கீழ்ப்படிதல் வேண்டாம் என்று சொல்வார்கள்

இதற்கு சாத்தியமில்லை:

ஆக, கீழ்படிதல் இல்லாமல், அதிகாரம் கிடைக்காது

5. வெளிப்படையான தோற்றம் — தேவனுக்கு முக்கியமில்லை (வ.7,10)

பவுலடியாரைப் பார்த்து சிலர் இப்படி குறை கூறினார்கள்:

  • “அவருடைய தோற்றம் பலவீனமாக உள்ளது”

  • “அவருடைய பேச்சில் வல்லமையில்லை”

ஆனால் தேவன் எதனை பார்க்கிறார்?

  • ஊழியரின் மனதை/இதயத்தைப் பார்க்கிறார்,

  • அழைப்பைப் பார்க்கிறார்

  • அபிஷேகத்தைப் பார்க்கிறார்

ஆனால், இன்று அனேக ஊழியர்கள் கீழ்கண்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்:

  • ஸ்டைல் (எல்லாரையும் கவரக்கூடிய பாணி)

  • ஸ்டேஜ் (மேடை பேச்சுத்திறமை)

  • பிரபலத்தன்மை

மேற்கண்டவைகளைப் பார்த்து ஊழியத்தை மதிப்பிடுகிறார்கள்

இது ஆபத்து!

தேவன் விசுவாசத்தை பார்க்கிறார்

6. அதிகாரம் — கட்டுவதற்கே (வ.8)

  • உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து

உண்மையான ஊழியக்காரர்:

  • உடைக்க மாட்டார்

  • கட்டுவார்

  • ஊக்குவிப்பார்

  • உயர்த்துவார்

தவறான ஊழியம் செய்கிறவர்கள்:

  • மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயலுவார்கள்

  • மக்களை பைபிளில் இல்லாதவைகளைச் சொல்லி பயமுறுத்துவார்கள்

  • மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த முயலுவார்கள்

இது தேவன் விரும்பும் ஊழியம் அல்ல‌.

7. மற்றவர்களோடு ஒப்பிடாதே — போட்டியிடாதே (வ.12)

ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களைக் கொண்டு தங்களை அளந்துக்கொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல

இன்று சிலர் இப்படி கூறுகிறார்கள்:

  • “அவர் சபை பெரியது”

  • “அவர் பிரபலமானவர்”

இது எல்லாம் உலக மனநிலை!

ஆனால், தேவனுடைய ஊழியக்காரர்:

  • தன் அழைப்பை அறிவார்

  • தன் பாதையில் நடப்பார்

8. தேவன் கொடுத்த எல்லைக்குள் இருங்கள் (வ.13–15)

தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு:

  • அழைப்பு

  • எல்லை

  • பணி

கொடுத்துள்ளார்.

ஆனால், நம்மில் சில ஊழியர்கள் என்ன செய்கிறோம்?

  • மற்றவரின் ஊழியத்தின் வெற்றியைப் பார்க்கிறோம்

  • நம்முடைய ஊழியத்தையும், அதன் பாணி தனித்துவத்தையும் மறந்துபோகிறோம்

ஒவ்வொரு ஊழியரும் இப்படி உணரவேண்டும்: உங்களுக்கு கொடுத்த ஊழியத்தை நிறைவெற்றுவதே ஆசீர்வாதம்.

9. மனிதரின் பாராட்டு அல்ல — தேவனின் அங்கீகாரம் (வ.18)

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

கடைசி சத்தியம்:

மனிதன் நம்மை பாராட்டுவது — தற்காலிகமானது

தேவன் அங்கீகரிப்பது தான் நித்தியமானது

இன்று அனேக ஊழியர்கள்:

  • தங்களை தாங்களே பிரபலம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்

  • தங்கள் பெயருக்காகவும், புகழுக்காகவும் பாடுபடுகிறார்கள்

இவை எல்லாம் வீண் என்பதை அறியார்கள்.

தேவன் எவைகளை பார்க்கிறார்களோ, அது தான் முக்கியம், நிலைத்து நிற்கும்.

உண்மையான தேவனுடைய ஊழியக்காரர்:

  • தாழ்மையுடன் நடப்பார்

  • ஆவியில் போராடுவார்

  • கீழ்ப்படிதலில் வாழ்வார்

  • மக்களின் வாழ்வை ஊண்றக்கட்டுவார்

  • தேவனின் அங்கீகாரத்தை தேடுவார்

தேவனுக்கு “பிரபலமான ஊழியக்காரர்கள் தேவையில்லை, உண்மையான விசுவாசமான ஊழியக்காரர்கள் தேவையாக இருக்கிறார்கள்!”.

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?