கேள்வி: இயேசு பேதுருவிடம் சாவியை கொடுத்தார், பவுலிடம் எழுதுகோலை (பேனாவை) கொடுத்தார் என்று ஊழியர்கள் சொல்கிறார்கள், இதன் பொருள் என்ன?

கேள்வி: இயேசு பேதுருவிடம் சாவியை கொடுத்தார், பவுலிடம் எழுதுகோலை (பேனாவை) கொடுத்தார் என்று ஊழியர்கள் சொல்கிறார்கள், இதன் பொருள் என்ன?

இது மிகவும் ஆழமான கேள்வி மற்றும் இன்றைய திருச்சபை புரிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான கேள்வியுமாகும். இன்றைய திருச்சபைகளில் காணப்படும் குழப்பங்களுக்கும், உள்வட்ட சண்டைகளுக்கும், காரணம் இவ்விரு விஷயங்களை சரியாக புரிந்துக்கொள்ளாமை ஆகும்.

பாஸ்டர், போதகர், மற்றும் மூப்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

ஒருவேளை, இதனை படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் ஒரு பாஸ்டராகவோ, போதகராகவோ, அல்லது சபையில் ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருக்கும் ஒரு மூப்பராகவோ, நிர்வாக பொறுப்புள்ளவராகவோ இருந்தால், இந்த விவரங்கள் உங்களுக்குத் தான்.

உங்களுக்கு இவ்விவரங்கள் பிடித்து இருந்தால், பயனுள்ளதாக இருந்தால், உங்கள் திருச்சபையின் பொறுப்பாளிகளுக்கு அனுப்பி படிக்கவையுங்கள், அவர்களும் பயனடைவார்கள்.

இதைக் குறித்து ஒரு சுருக்கமான பதிலை பார்ப்போம்.


அறிமுகம்

இன்று சபையில் இரண்டு வகை மக்கள் இருக்கிறார்கள்:

  • அதிகாரம் வேண்டும் (Keys), ஆனால் சத்தியம் (Pen) வேண்டாம்

  • சத்தியம் வேண்டும் (Pen), ஆனால் அபிஷேகம்/அதிகாரம் வேண்டாம்

இதுதான் இன்று சபையின் பெரிய பிரச்சனை! இரண்டையும் சரியான விகிதத்தில் சபையில் பயன்படுத்தும் போது சபை வளரும், சபையின் சமாதானம் பெருகும், சபை மூலமாக, கர்த்தரின் நாமமும் மகிமைப்படும்.

1. பேதுருவுக்கு கொடுக்கப்பட்ட சாவி/ திறவுகோல்

பேதுரு, சாதாரண மீனவர், ஆனால் ஒரு வெளிப்பாடு பெற்றவர்! இயேசு பேதுருவிடம் சொன்ன வார்த்தைகளை சிறிது கவனியுங்கள்:

மத்தேயு 16:19

  • பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்’

Matthew 16:19

  • I will give you the keys of the kingdom of heaven; whatever you bind on earth will be bound in heaven, and whatever you loose on earth will be loosed in heaven (NIV).

ஏன் பேதுருவிடம் இயேசு இப்படி வாக்கு செய்தார்?

  • பேதுரு பரிசுத்தமானவர் என்பதற்காக அல்ல

  • பேதுரு பரிபூரணமானவர் என்பதற்காக அல்ல

அவர் வெளிப்பாடு பெற்றவர் என்பதற்காக!

வேறு ஒரு நிகழ்ச்சியின் போது, பிதா ஒரு முக்கியமான வெளிப்பாட்டை பேதுருவிற்கு வெளிப்படுத்தினார், அது என்னவென்று பாருங்கள், இதனை இயேசு எப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டுச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள்

மத்தேயு 16:17

  • இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்

Matthew 16:17

  • Blessed are you, Simon son of John, for this was not revealed to you by flesh and blood, but by my Father in heaven (NIV).

ஆனால், இப்படிப்பட்ட வெளிப்பாடு பிதாவினிடத்தில் பெற்ற பேதுரு என்ன செய்தார்?

அதே பேதுரு:

  • இயேசுவின் சிலுவை மரணம் பற்றி பேசும் போது, பேதுரு இயேசுவை எதிர்த்தார், தடுத்தார்

  • இன்னொரு முறை இயேசுவை மறுத்தார், அதன் பிறகு மனங்கசந்து அழுது மனந்திரும்பினார்

இதன் அர்த்தம் என்ன?

தேவன் திறவுகோலை பரிபூரணமானவர்களுக்கு அல்ல, மனந்திரும்புகிறவர்களுக்கு தருகிறார்!

பேதுரு எப்படி இந்த சாவியை பயன்படுத்தி, சுவிசேஷ கதவுகளை திறந்தார்?

  • அப்போஸ்தர் நடபடிகள் 2: யூதர்களுக்காக நற்செய்தி கதவு திறக்கப்பட்டது

  • அப்போஸ்தர் நடபடிகள் 8: சமாரியர்களுக்காக நற்செய்தி கதவு திறக்கப்பட்டது,

  • அப்போஸ்தர் நடபடிகள் 10: அந்நிய ஜனங்களுக்கான நற்செய்தி கதவு திறக்கப்பட்டது

பேதுரு திருச்சபையை கட்டவில்லை, அவர் நற்செய்தி கதவுகளை திறந்து வைத்தார், இதனால் எல்லா ஜனங்களும் சபைக்குள் வந்தார்கள்.

2. பவுலிடம் கொடுக்கப்பட்ட எழுதுகோல்(பேனா)

அப்போஸ்தலர் பவுலடியார், இயேசுவின் உள்வட்ட 12 சீடர்களில் ஒருவராக இருந்ததில்லை.

  • இதுமட்டுமா, தொடக்கத்தில் இயேசுவின் திருச்சபையை துன்புறுத்தியவர் ஆவார்

ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாடு எப்படி மற்றும் யாரிடம் பெற்றுக்கொண்டார் என்று அவர் சொல்வதை கவனியுங்கள்:

கலாத்தியர் 1:12

நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்

பவுலுக்கு நேரடியாக‌ “பேனா” கொடுக்கவில்லை:

ஆக, பேதுருவிடம் இயேசு நேரடியாக சொன்னது போல, நான் உனக்கு ஒரு எழுதுகோலை (பேனாவை) தருவேன் என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக அவருக்கு சபை பற்றிய பல சத்தியங்களை வெளிப்படுத்தினார், அவர் அதனை எழுதும்படியும் செய்தார்.

  • அவருக்கு வெளிப்பாடு கொடுக்கப்பட்டது!

தனக்கு கிடைத்த வெளிப்பாடுகளை அவர் எங்கே, மற்றும் எந்தெந்த சூழலில் எழுதினார்:

  • சிறைச்சாலைகளில்

  • துன்பம் நிறைந்த நேரங்களில்

  • அடிகள் வாங்கிய சூழலில்

  • தனிமை நேரங்களில்

இப்படிபட்ட சாதகமில்லாத சூழல்களில் அவர் எழுதியதால் தான், அவரது வார்த்தைகளில் உலகத்தோடு சமரசம் செய்துக்கொள்ளாத‌ சத்தியம் தெளிவாக‌ வெளிப்பட்டது.

மேலும் புதிய ஏற்பாட்டின் அதிகமான கடிதங்களை/புத்தகங்களை பவுலடியார் மூலமாக பரிசுத்த ஆவியானவர் எழுதினார், சபைக்கு தேவையான சத்தியங்கள் இந்த கடிதங்களில் காணலாம்.

  • ரோமர்

  • கொரிந்தியர் (1 & 2)

  • கலாத்தியர்

  • எபேசியர்

  • கொலோசெயர்

  • தெசலோனிக்கேயர் (1 & 2)

  • தீமோத்தேயு (1 & 2)

  • தீத்து

  • பிலேமோன்

அதிகமான புத்தகங்களை பவுலடியார் எழுதியதால் தான் 'இயேசு பவுலிடம் பேனாவை' கொடுத்தார் என்று ஊழியர்கள் பொதுவாக பேசுகிறார்கள்.

3. இன்றைய சபையின் ஆபத்து

திறவுகோல் இருக்கிறது… ஆனால் பரிசுத்தம் இல்லை

  • பதவி இருக்கிறது

  • பட்டம் இருக்கிறது

ஆனால் தேவனின் பயம் இல்லை

பேனா இருக்கிறது… ஆனால் ஆவி இல்லை

  • பெரிய பிரசங்கங்கள்

  • நல்ல வார்த்தைகள்

ஆனால் மாற்றம் இல்லை

ஏதோ ஒன்று மட்டும் இருக்கும் சபை, தேவன் விரும்பும் சபை அல்ல! இரண்டும் வேண்டும், சாவியும் (பேதுரு) வேண்டும் மற்றும் பேனாவும் (பவுல்) வேண்டும்

4. தேவனின் உண்மையான திட்டம்

தேவன் சபையில் எதிர்ப்பார்ப்பது:

  • பேதுரு போல‌ திறவுகோலும் வேண்டும்

  • பவுல் போல‌ வெளிப்பாடும் வேண்டும்

திறவுகோல் மட்டும் இருந்தால்:

  • கதவு திறக்கும்… ஆனால் மக்கள் நிலைக்க மாட்டார்கள், ஏனென்றால், சத்தியம் இல்லையே, வேத வசனம் இல்லையே!

வெளிப்பாடு மட்டும் இருந்தால்:

  • சத்தியம் இருக்கும், இதனால் என்ன பயன், இன்னும் கதவு திறக்கப்படவில்லையே!

எனவே, இரண்டும் முக்கியம்: ஒரு சபைக்கு சாவியும், சத்தியமும்(பேனாவும்) முக்கியம்

5. ஒரு தீர்மானம் எடுப்போம்:

இன்று தேவன் கேட்கிறார்:

  • நமக்கு பதவி வேண்டுமா? அல்லது பரிசுத்தம் வேண்டுமா?

  • நமக்கு அறிவு வேண்டுமா? அல்லது அபிஷேகம் வேண்டுமா?

இப்போதே உங்கள் இருதயத்தை ஆராயுங்கள்…

“தேவனே…” எங்களுக்கு

  • திறவுகோல் மட்டும் வேண்டாம்

  • பேனா மட்டும் வேண்டாம்

எங்களை இந்த விஷயத்தில் உடைத்துவிடுங்கள், எங்களை மாற்றுங்கள், எங்களை பயன்படுத்துங்கள்.

கர்த்தாவே இந்த காலங்களில் திறவுகோலை உடைய தேவமனிதர்களையும், சத்தியத்தை உடையே தேவமனிதர்களையுன் எழுப்புங்கள்.

சகோதரனே / சகோதரியே…

  • திறவுகோல் வேண்டுமா?

  • இல்லை, சத்தியமாகிய பேனா வேண்டுமா?

தேவன் சொல்கிறார்: “இரண்டும் நான் தருகிறேன்… நீ முழுவதும் எனக்கு கொடு!”

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?