கேள்வி: ஒரு விசுவாசி தனது தற்போதைய சபையை விட்டு மற்றொரு சபைக்கு செல்லலாமா? அப்படி செல்வதாக இருந்தால், எந்தெந்த காரணங்களுக்காக சபையை மாற்றலாம்?
கேள்வி: ஒரு விசுவாசி தனது தற்போதைய சபையை விட்டு மற்றொரு சபைக்கு செல்லலாமா? அப்படி செல்வதாக இருந்தால், எந்தெந்த காரணங்களுக்காக சபையை மாற்றலாம்?
ஒரு விசுவாசி சபையை விட்டு செல்லலாம், ஆனால் அது ஜெபத்தோடும், சரியான வேத அறிவோடும், கர்த்தரோடு சமாதானம் கொண்டு செய்யவேண்டும். வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலும், சபையாரோடு அல்லது பாஸ்டரோடு உருவான ஒரு சிறிய கோபத்தின் வெளிப்படாக இருக்கக்கூடாது.
வேதத்தின் அடிப்படையில், ஜெபத்தோடு சில காரணங்களை காணலாம்.
1) பாஸ்டரின் தவறான போதனை / வேதாகமத்திற்கு எதிரான உபதேசம்
இது மிக முக்கிய காரணம்.
ஒரு சபை அல்லது போதகர் தொடர்ந்து வேதாகமத்திற்கு எதிரான போதனைகளை கற்பித்தால், அந்த சபையை விட்டு செல்லலாம்.
உதாரணங்கள்:
- இயேசுவின் தெய்வீகத்தை மறுத்தல்
- உயிர்த்தெழுதலை மறுத்தல்
- இரட்சிப்பு கிரியைகளால் மட்டுமே என்று கற்பித்தல்
- சுவிசேஷத்திற்கு எதிரான போதனை
- தன் சுல லாபத்திற்காக வேதாகமத்தை திரித்து பயன்படுத்துதல்
- அளவுக்கு மீறிய செழிப்பு உபதேசம் செய்தால் (Prosperity Gospel Preaching)
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்
கலாத்தியர் 1:8 – “வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்”
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்
2) போதகரின் வெளிப்படையான, மனந்திரும்பாத பாவ வாழ்க்கை
போதகர் தேவனைப்போல பரிபூரண பரிசுத்தராக இல்லாமல் இருந்தாலும், அவரிடம் வெளிப்படையான, மனந்திரும்பாத பாவ வாழ்க்கை இருக்கக்கூடாது.
இவைகளைப் பாருங்கள், இவைகள் உங்கள் பாஸ்டரிடம் இருந்தால், அவரை விட்டு வெளியேறிவிடுங்கள்:
உதாரணங்கள்:
விபச்சாரம் / ஒழுக்கக்கேடு
பண மோசடி
பொய், ஏமாற்றம்
அதிகார துஷ்பிரயோகம்
மதுபானம் குடிப்பது
விசுவாசிகளை சுரண்டுதல்
1 தீமோத்தேயு 3:2
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3) ஒழுக்கமும் கண்காணிப்பும் இல்லாத சபை
சபை தலைவர்கள் விசுவாசிகளின் பாவங்களை மறைத்து, அதை கண்டும் காணாதவர்களாக இருந்தால், இதுவும் ஆபத்து. அவர்களும் பரிசுத்தராக வாழவேண்டும், விசுவாசிகளின் வாழ்க்கையையும் கண்காணித்து திருத்தவேண்டும்.
ஒரு நல்ல சபையில் இருக்க வேண்டியவை:
மூப்பர்கள் / கண்காணிப்பு
திருத்தம் (discipline)
வெளிப்படைத்தன்மை
மனந்திரும்ப வழிகாட்டால்
இவைகளைச் செய்யாமல், விசுவாசிகளை கர்த்தர் வரும் நாள் வரை கண்டுக்கொள்ளாத சபையை விட்டு நீங்கள் வேறு நல்ல சபைக்குச் செல்லலாம்.
4) ஆத்துமீக துஷ்பிரயோகம் / கட்டுப்பாடு
சில சபைகள் விசுவாசிகளை கட்டுப்படுத்த, தங்கள் அதிகாரத்திற்குள் வைத்துக்கொள்ள பல வகைகளில் தந்திரங்களை மேற்கொள்ளும்.
உதாரணங்கள்:
பயம் மூலம் கட்டுப்படுத்துதல்
“போதகரை கேள்வி கேட்கக்கூடாது” சொல்லிக்கொண்டே இருத்தல்
மனஅழுத்தம் / emotional manipulation
“வேறு சபைக்குச் சென்றால் தேவன் சாபம் விடுவார்” என்று மிரட்டுதல்
விசுவாசிகளின் குடும்பங்களில் குழப்பத்தை உண்டாக்குதல்
அதிகமான பண அழுத்தம் கொடுத்தல்
யோவான் 10:10 – நல்ல மேய்ப்பன் ஜீவன் தருகிறார்:
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்
5) ஆன்மீக வளர்ச்சி இல்லாத நிலை
சில சமயம் சபை தவறாக இருக்காமல் இருந்தாலும், ஆன்மீக வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம்.
உதாரணங்கள்:
ஆழமான வேதாகம போதனை இல்லை
சீடத்துவம் இல்லை
ஜெப வாழ்க்கை இல்லை
ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்பு இல்லை
இப்படி இருந்தால், நல்ல வளர்ச்சிக்காக சபை மாற்றம் செய்யலாம்.
இப்போது, சில சிறிய காரணங்களுக்காக சிலர் சபையை அடிக்கடி மாற்றுகிறார்கள், அவைகளை நாம் செய்யக்கூடாது
கீழ்கண்டவற்றிற்காக மட்டும் சபையை விட்டு செல்ல வேண்டாம்:
இசை பாணி சரியில்லை
சிறிய கருத்து வேறுபாடு
தனிப்பட்ட விருப்பங்கள்
6) பாஸ்டரிடம் பெரிய குறை உள்ளது, என்ன செய்யலாம்? - வேதாகம முறையில் தீர்க்கவேண்டும்
📖 மத்தேயு 18:15-18 படி:
15: உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
16: அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ
17: அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருக்கக்கடவன்
எனவே, பாஸ்டராக இருந்தாலும் சரி:
தனியாக பேசு
சாட்சிகளுடன் பேசு
இதர சபை தலைவர்களிடம் சொல்
இதற்குப் பிறகும் பிரச்சனை நீங்கவில்லை என்றால், அமைதியாக சபையை விட்டுச் செல்லலாம்.
7) தேவன் தெளிவாக வழிநடத்தும் போது
சில சமயம் காரணம் பிரச்சனை அல்ல.
உதாரணங்கள்:
வேறு நகரத்திற்கு வேலை மாற்றம்
ஊழிய அழைப்பு வந்தது
குடும்ப தேவைகள்
மொழி காரணம் (புரியாத மொழியில் செய்தி கேட்டு என்ன பயன்?)
குழந்தைகளின் ஆவிக்குரிய வளர்ச்சி
எப்போது சபையை விட்டுச் செல்லக்கூடாது?
இவற்றுக்காக மட்டும் சபையை விட்டு செல்ல வேண்டாம்:
போதகர் பழைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பிவிட்டார்
ஒரு பிரசங்கம் பிடிக்காததால்
தனிப்பட்ட மனவருத்தம்
சிறிய கோபம் / ஈகோ
முக்கியமல்லாத கொள்கை வேறுபாடு
ஒரு முக்கிய ஆன்மீகக் கொள்கை
சுருக்கமாக சொல்வதென்றால், கீழ்கண்ட காரணங்களுக்காக மட்டும் வேறு சபைக்குச் செல்லுங்கள்:
✔ சத்தியம் பாதிக்கப்படுகிறது
✔ பரிசுத்தம் புறக்கணிக்கப்படுகிறது
✔ திருத்தம் தோல்வியடைந்தது
✔ தேவன் வேறு இடத்திற்கு அழைக்கிறார்
அப்படி செல்லும் போது, கீழ்கண்டவைகளை கவனியுங்கள்:
ஜெபத்துடன் முடிவு செய்யுங்கள்
அமைதியாக விட்டு செல்லுங்கள்
கிசுகிசு செய்யாதீர்கள்
சபையை பிரிக்காதீர்கள்
அன்புடன் தொடருங்கள்
“சமாதானத்துடன் விட்டு செல்லுங்கள்; கிசு கிசு செய்துவிட்டு செல்லாதீர்கள்”

Comments
Post a Comment