1 கொரிந்தியர் 14: தேவன் சத்தத்தால் கவரப்படமாட்டார்; சபை பக்திவிருத்தி அடைந்தால் மகிழுவார்

 



1 கொரிந்தியர் 14 – சுருக்கம்

1 கொரிந்தியர் 14ல் அப்போஸ்தலர் பவுலடியார் சபையில் ஆவிக்குரிய வரங்கள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கற்பிக்கிறார்.

14வது அத்தியாயத்தின் முக்கிய கருத்துகள்:

  • அன்பை முதலில் நாடுங்கள் (வசனம் 1)
    எல்லா வரங்களும் அன்பில் இருந்து வர வேண்டும்.

  • அந்நிய பாஷைகள் vs தீர்க்கதரிசனம்

    • அந்நிய பாஷைகள் → தேவனோடு பேசுவது (தனிப்பட்ட ஆவிக்குரிய பக்தி விருத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது)

    • தீர்க்கதரிசனம் → மக்களோடு பேசுவது (சபையின் ஆவிக்குரிய பக்தி விருத்திக்காக கொடுக்கப்பட்டுள்ளது)

  • சபை வளர்ச்சியே இலக்கு: 
    சபையில் செய்யப்பட்டும் அனைத்து காரியங்களும் “சபையை கட்டியெழுப்பவும் மற்றும் பக்தி விருத்திக்காகவும் இருக்கவேண்டும்” 

  • புரிதல் அவசியம்
    சபையில் யாராவது அந்நிய பாஷையில் பேசினால், அதற்கு வியாக்கீனம் (விளக்கம்) கொடுக்கப்படவேண்டும். 

  • ஒழுங்கு மற்றும் சமாதானம்
    தேவன் குழப்பத்தின் தேவன் அல்ல, சமாதானத்தின் தேவன்.


ஆவிக்குரிய வரங்கள்: “சபையை கட்டியெழுப்பு, உன்னை அல்ல”

அன்பான சபையே,

இன்று பலர் வரங்களை பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் தேவன் கேட்கிறார்:

  • “வரங்களினால் சபை கட்டப்படுகிறதா?”

நீங்கள் அந்நிய மொழிகளில் பேசலாம், ஆனால் யாருக்கும் புரியவில்லை என்றால்:

  • ஆரம்பகட்ட‌ புதிய விசுவாசிகள் குழம்பிவிடுவார்

  • மாற்று மத நண்பர்கள், புதிதாக சபைக்கு வந்திருந்தால், 'அந்நிய பாஷை பேசுபவரைப் பற்றி, இவருக்கு பைத்தியம் பிடித்துள்ளது போல என்று எண்ணிவிடுவார்'.

  • சபைவியாக்கீனம்/விளக்கம் கொடுக்காமல், அந்நிய பாஷை பேசினால், சபை வளராது.

ஆனால்,

  • அனைவருக்கும் புரியும் மொழியில் ஒரு  உற்சாகப்படுத்தும் வார்த்தை,
  • ஒரு ஆறுதல் தரும் வார்த்தை,
  • ஒரு சீர்திருத்தும் வார்த்தைகள் பேசினால்…

முழு சபையும் கட்டப்படும்!

தேவன் சத்தத்தால் கவரப்படமாட்டார்; வளர்ச்சியால் மகிழ்கிறார்.


பாஸ்டர்களுக்கும்,தலைவர்களுக்கும்,  மூப்பர்களுக்கும் எச்சரிக்கை

இது குற்றஞ்சாட்டல் அல்ல, ஒரு அன்பான நினைவூட்டல்.

இன்றைய திருச்சபைகளில், அந்நிய பாஷைகளை, பைபிள் சொல்வதையும் கேட்காமல், தவறாக பயன்படுத்துகிறார்கள்.

தவறான பயன்பாடுகள்:

  • வியாக்கீனம்/விளக்கம் கொடுக்காமல் பாஷைகள் பேசுகிறார்கள்

  • சபை விசுவாசிகளை கட்டாயப்படுத்தி, 'பேசு, பேசு, பேசு' என்று பேச வைக்கிறார்கள்.

  • அந்நிய பாஷைகள் பேசினால் தான், ஒரு விசுவாசி/ஊழியர் ஆவிக்குரியவர் என்று தவறாக நம்பும் படி மாற்றியுள்ளார்கள்.  இதனை சபை அறியாமையில் நம்பிவிட்டது

  • இதனால், சபையில் குழப்பம் உண்டாகியுள்ளது


பைபிள் நம்மை எப்படி சபையில் வரங்களை பயன்படுத்தச் சொல்கிறது:

1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் தெளிவாகச் சொல்கிறது:

  • வியாக்கீனம் செய்பவர் இல்லையென்றால், சபையில் அந்நிய பாஷை பேசக்கூடாது, அமைதியாக இருக்கவேண்டும்.

  • வியாக்கீனம் இருந்து பேசினால், ஒவ்வொருவராக பேசுங்கள்

  • சபையை கட்டியெழுப்புங்கள்

  • சபையில் ஒழுக்கமாக இதனை செய்யுங்கள்,  சபையில் சமாதானத்தை காத்துக்கொள்ளுங்கள்

இறுதி அழைப்பு

அன்பான தேவ ஊழியர்களே,

ஆவியானவர் குழப்பத்தில் மகிமைப்படமாட்டார், அவர் ஒழுங்கிலும் சத்தியத்திலும் மகிமைப்படுகிறார்


முடிவு வரி

“ஆவியின் உண்மையான அடையாளம், நீங்கள் எவ்வளவு உயரமாக சத்தமாக‌ பேசுகிறீர்கள் என்பதில் இல்லை; சபை எவ்வளவு ஆழமாக கட்டப்படுகிறது என்பதில் உள்ளது.”

உங்களால் முடிந்தால், இன்னொரு முறை 1 கொரிந்தியர் 14வது அதிகாரத்தை வாசித்து, ஒவ்வொரு வசனமாக ஆவியானவருக்குள் தியானித்துப் பாருங்கள்.

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?