கேள்வி: “உங்களுக்குள் இருக்கும் ஆவிக்குரிய வரத்தை எப்படி கண்டுபிடிப்பது?
1 கொரிந்தியர் 12 அத்தியாயத்தின் படியான வழிமுறை:
அடிப்படை சத்தியம்:
நீங்கள் உண்மையான விசுவாசியாக இருந்தால், உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆவிக்குரிய வரம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள்:
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது (1 கொரி 12:7)
1 Corinthians 12:7 "Now to each one the manifestation of the Spirit is given for the common good" (NIV).
பரிசுத்த ஆவியானவர் அருளும் வரங்கள் (gifts) தனிப்பட்ட நபரின் பெருமைக்காக அல்ல, மாறாக சபையின் பொது நன்மைக்காகவும் (Common Good), பிறருக்கு உதவும்படியும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
- சிலருக்கு மட்டும் அல்ல
- விசேஷமானவர்களுக்கு மட்டும் அல்ல
- ஒவ்வொருவருக்கும் தேவைக்கு ஏற்ப ஆவியானவரால் கொடுக்கப்படுகிறது
உங்களுக்குள் இருக்கும் ஆவிக்குரிய வரத்தை எப்படி கண்டுபிடிப்பது?
1) பரிசுத்த ஆவிக்குத் தாழ்மையாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்
ஆவிக்குரிய வரங்கள் மனித திறமைகளால் உண்டாவதில்லை;
அவை பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்டவை.
உங்களையே நீங்களே கேட்டுப்பாருங்கள்:
- இயேசு என் வாழ்க்கையின் ஆண்டவராக இருக்கிறாரா?
- அவரிடம் நான் முழுமையாக ஒப்புக்கொடுத்து உள்ளேனா?
நம்மை முழுவதுமாக ஆவியானவருக்கு ஒப்படைக்கவில்லை என்றால், ஆவியின் வரங்கள் பற்றி சரியான தெளிவு கிடைக்காது.
2) வரங்களின் நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள்
வரங்கள் கொடுக்கப்படுவதன் நோக்கம்:
- சபையை கட்டியெழுப்ப
- மற்றவர்களுக்கு சேவை/உதவி செய்ய
- கிறிஸ்துவை மகிமைப்படுத்த
வரங்கள் கொடுக்கப்படுதின் நோக்கம் கீழ்கண்டவைகள் அல்ல:
- நாம் புகழைப் பெற
- எல்லோருக்கும் முன்பாக 'இவர் ஆவிக்குரியவர்/அபிஷேகம்' பெற்றவர் என்று வெளிப்புறமாக காணப்பட
- வரங்களைக் காட்டி மனிதர்களை கவர்ந்து இழுக்க
ஆவியின் வரங்கள் பற்றி தவறான நோக்கம் கொண்டு இருந்தால், அதனை தவறாகவே பயன்படுத்துவீர்கள், இதனை மறக்கவேண்டாம்.
தவறான நோக்கம் → தவறான பயன்பாடு
3) உங்கள் உள்ளத்தில் பற்றி எரியும் பாரத்தை கவனியுங்கள்
உங்கள் வரம், உங்கள் மனதின் பாரத்துடன் தொடர்புடையது.
கேள்விகள்:
- சபையில் என்ன பிரச்சினை என்னை மிகவும் பாதிக்கிறது?
- “இது மாற்றப்பட வேண்டும்” என்று என்னை எது தூண்டுகிறது?
பாரம் = அழைப்பு (Burden = Calling)
உங்கள் உள்ளத்தில் எந்த பாரம் உங்களை அழுத்துமோ, அதுவே உங்கள் அழைப்பாக மாறும்
4) நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
கர்த்தர் என்னை ஊழியத்துக்கு அழைக்க, வானத்திலிருந்து ஒரு சத்தம் வரவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் செயல்களை கவனியுங்கள்:
- இயல்பாகவே மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? → அப்படியென்றால், உங்களுக்கு உற்சாகப்படுத்தும் வரம் இருக்கிறது என்று பொருள்.
- இயல்பாகவே வேத வசனத்தை தெளிவாக போதிக்கிறீர்களா?? → உங்களுக்கு போதிக்கும் வரம் இருக்கிறது என்று பொருள்.
- நீங்கள் ஒழுங்குபடுத்துகிறீர்களா? → உங்களுக்கு நிர்வாக வரம் இருக்கிறது என்று பொருள்.
- அமைதியாக உதவுகிறீர்களா? → உங்களுக்கு ஊழியம்/சேவை செய்யும் வரம் உள்ளது என்று பொருள்
இப்படியாக, இயல்பாக நீங்கள் செய்யும் செயல்களே, உங்களிடம் உள்ள வரத்தை காட்டுகிறது. சிறிய செயல்களில் உங்கள் வரம் வெளிப்படுகிறது.
5) இன்றே ஊழியம்/சேவை செய்ய ஆரம்பியுங்கள்
ஊழியம்/சேவை செய்யும் போது தான், ‘என்ன வரம் உள்ளது?’ என்று வெளிப்படும்.
- ஒரு ஜெபக்குழுவில் சேரலாம்
- சிறிய போதிக்கும் ஊழியத்தில் சேரலாம்
- மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்
- சபையின் நிர்வாகத்தில் பங்கு பெறலாம்
6) ஆவிக்குரிய கனிகளை கவனியுங்கள்
நீங்கள் உண்மையான வரத்தில் செயல்படும் போது:
- மக்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
- உங்களுக்கு ஆனந்தம் இருக்கும்
- மாற்றம் ஏற்படும்
- சபை வளர்ச்சி காணும்
உண்மையான வரம் வெளிப்படும் போது = பிறர் வாழ்க்கையில் தாக்கம்/ஆசீர்வாதம் உண்டாகும்
7) சபையின் உறுதிப்படுத்தலை பெறுங்கள்
வரங்களை நாம் மட்டும் தனிப்பட்ட முறையில் அறிவது மட்டுமல்ல, அவை சபையில் அறியப்பட வேண்டும்.
இதனால் முதிர்ந்த விசுவாசிகளிடம் கேளுங்கள்:
- “என்னுள் எந்த வரத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்?”
- “நான் சபையில் எதில் பயனுள்ளதாக இருக்கிறேன்?”
அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு செயல்படுங்கள்
8) ஆனந்தம் தரும் சேவையை கவனியுங்கள்
உங்கள் வரம் உங்களுக்கு ஆவிக்குரிய சந்தோஷத்தை தரும்.
- போதிப்பவர் → போதிப்பதில் மகிழ்ச்சி அடைவார்
- உதவுபவர் → சேவையில் மகிழ்ச்சி அடைவார்
- வழிநடத்துபவர் → ஒழுங்குபடுத்துவதில் மகிழ்ச்சி அடைவார்
வரம் நம்மில் செயல்படும் போது, சந்தோஷம் ஒரு முக்கிய அடையாளமாக நம் உள்ளத்தில் இருக்கும்.
9) மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்
1 கொரிந்தியர் 12:15
- "காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயமாயிராதோ?"
மற்றவர்களோடு நீங்கள் ஒப்பிட்டால், அது உங்கள் வரத்தை கொல்லும்
தேவன் உங்களை தனித்துவமாக படைத்துள்ளார், எனவே, நானும் அந்த குறிப்பிட்ட ஊழியர் போல, அவரிடம் உள்ள வரத்தை உடையவனாக இருப்பேன் என்றுச் சொல்வது சரியானதல்ல.
10) உங்கள் வரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒரு ஆவியின் வரம் கிடைத்தது, என்றால், அது 'முழுமை அடைந்த ஒன்று' என்று அர்த்தமில்லை. ஆவிக்குரிய வரத்தை எரிந்துக்கொண்டே இருக்கச் செய்யவேண்டும், வளர்க்கவேண்டும்
- பயிற்சி செய்யுங்கள்
- கற்றுக்கொள்ளுங்கள்
- வளருங்கள்
- தாழ்மையாக இருங்கள்
2 தீமோத்தேயு 1:6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
2 Timothy 1:6 : For this reason I remind you to fan into flame the gift of God, which is in you through the laying on of my hands
வரம் வளர்க்கப்பட வேண்டியது.
வரங்கள் பற்றி நாம் பொதுவாக செய்யும் 5 தவறுகள்: இவைகளை தவிர்க்கவேண்டும்
- ஒரு அதிசய அறிகுறி கிடைக்கும் என்று காத்திருப்பது
- “என்னிடம் வரம் இல்லை” என்று நினைப்பது
- பெரிய/பிரபலமான வரங்களை மட்டுமே தேடுவது
- சிறிய ஊழியங்களை/சேவைகளை மறுப்பது
- பிறருடன் ஒப்பிடுவது
இறுதி சவால்: இன்று உங்களையே கேளுங்கள்:
- நான் எங்கே சேவை செய்கிறேன்?
- என்ன பாரம் தேவன் எனக்கு கொடுத்தார்?
- எதில் நான் மாற்றத்தை பார்க்கிறேன்?
தேவன் உங்களை சபையில் உட்கார வைத்ததற்காக ரட்சிக்கவில்லை, செயல்படுவதற்காக ரட்சித்தார். நீங்கள் ஒரு சாதாரண விசுவாசி அல்ல, நீங்கள் கிறிஸ்துவின் உடலின் முக்கிய அங்கம்.

Comments
Post a Comment