கேள்வி ‍ 17: நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள் என்பதின் அர்த்தம் என்ன?


1 கொரிந்தியர் 3:23: “நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து தேவனுக்குரியவர்.” 

இந்த வசனம் கொரிந்திய சபையில் ஏற்பட்ட பிரிவினைகளை சரிசெய்ய பவுல் எழுதினார். அந்த சபையில் சிலர் இப்படி பெருமையடித்துக் கொண்டார்கள்:

  • நான் பவுலைச் சேர்ந்தவன்

  • நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்

  • நான் கேபா(பேதுரு)வை சேர்ந்தவன்

அதாவது அவர்கள் மனித தலைவர்களைப் பற்றிக் பெருமைப்பட்டார்கள். அதனால் பவுல் இந்த வசனத்தில் உண்மையான ஆவிக்குரிய‌ ஒழுங்கை விளக்குகிறார்.

1. “கிறிஸ்துவுக்குரியவர்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

“Belong to Christ” என்றால் உரிமை, உறவு, அதிகாரம் என்ற மூன்று முக்கிய அம்சங்கள் அடக்கிய ஒரு உறவாகும். எப்படியெல்லாம் விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

a) விசுவாசிகள் மீட்பின் மூலம் (Redemption) கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள்:

இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தால் விசுவாசிகளை வாங்கினார்.

1 கொரிந்தியர் 6:19–20

  • உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1 கொரிந்தியர் 6:19 )

  • கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். (1 கொரிந்தியர் 6:20)

அதாவது

இயேசு நம்முடைய பாவங்களின் தண்டனைக்காக 'அவர் விலை செலுத்தி, நம்மை மீட்டுக்கொண்டார்' எனவே, நாமும் நம்முடைய வாழ்க்கையும் இயேசுவிற்கு உரியதாகின்றது. இந்த வகையில் நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.

2. விசுவாசிகள் உடன்படிக்கை உறவு (Covenant Relationship) மூலமாக அவருக்கு சொந்தமாகிறார்கள்:

ஒரு 'மணவாளன், மணவாட்டி' உடன்படிக்கையின் மூலமாக‌ உறவில் இருப்பது போன்று, விசுவாசிகள் (மணவாட்டி) இயேசுவிற்கு(மணவாளன்) சொந்தமானவர்கள்.

2 கொரிந்தியர் 11:2

  • 2 கொரிந்தியர் 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்...

அதாவது:

சபை = மணமகள்

கிறிஸ்து = மணமகன்

இதன் பொருள் நெருக்கமான உறவு மற்றும் விசுவாசம் கொண்டு வாழுவதாகும்.

3. விசுவாசிகள் கிறிஸ்துவோடு ஒன்று சேர்ந்து (Union with Christ) இருப்பதினால் சொந்தமாகிறார்கள்:

விசுவாசிகள் ஆவிக்குரிய முறையில் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவர்கள்.

கலாத்தியர் 2:20

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; . . .

அதாவது:

நம்முடைய அடையாளம் கிறிஸ்துவில் உள்ளது, மற்றும் நம் வாழ்க்கை அவரோடு இணைந்தது.

4. ஆண்டவரின் அதிகாரம் (Lordship)

கிறிஸ்து நம் ஆண்டவர்.

ரோமர் 14:8

நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.

அதாவது:

இயேசு நம் வாழ்க்கையின் தலைவன், நாம் அன்போடு அவருக்கு கீழ்ப்படிகிறோம்.

2. “பாஸ்டர்கள் விசுவாசிகளுக்குரியவர்கள்” என்பதன் அர்த்தம் என்ன?

இதற்கு முன் பவுல் இப்படிச் சொல்கிறார்:

1 கொரிந்தியர் 3:21–22

இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே. பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

இதன் பொருள்:

விசுவாசிகள் இப்படிச் சொல்லக்கூடாது:

  • “நான் அந்த பாஸ்டருக்குரியவன்”

  • “நான் இந்த ஊழியத்துக்குரியவன்”

உண்மையில்:

  • பாஸ்டர்கள் சபைக்கு சேவை செய்யும் ஊழியக்காரர்கள்.

அவர்கள்:

  • விசுவாசிகளை சேவிக்க தேவன் நியமித்த ஊழியர்கள்

  • விசுவாசிகளின் எஜமானர்கள் அல்ல.

இதை இயேசு சொல்லியிருக்கிறார்.

மாற்கு 10:43-44

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.

தவறான சிந்தனை vs வேதாகம சிந்தனை

தவறான சிந்தனைசரியான வேதாகம சிந்தன
விசுவாசிகள் பாஸ்டருக்குரியவர்கள்பாஸ்டர்கள் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்பவர்கள்
பாஸ்டர் எஜமானர்கள்கிறிஸ்து மட்டுமே எஜமான்
மனிதரைப் பின்பற்றுதல்கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

3. “கிறிஸ்து தேவனுக்குரியவர்” என்பதன் அர்த்தம்

“Christ is God’s” : இவ்வார்த்தைகள், பிதா குமாரன் மத்தியில் உள்ள உறவை குறிக்கிறது.

கிறிஸ்து தேவனுடையவர் (1 கொரி 3:23) என்றுச் சொன்னால், கிறிஸ்து தேவனைவிட தாழ்ந்தவர் என்று பொருள் அல்ல.

வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது:

  • கிறிஸ்து இறைவனாக இருக்கிறார்

  • ஆனால் பிதாவின் சித்தத்திற்கு இயேசு கீழ்ப்படிகிறார்.

யோவான் 6:38

  • என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்

ஒருவர் இன்னொருவரின் சித்தத்தை செய்தால், அவர் தாழ்ந்துபோய்விட்டார் என்று பொருள் அல்ல.

1 கொரிந்தியர் 11:3

“... கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும்....”

இந்த வசனம், ஒரு வரிசைப்படியான ஒழுங்கைச் சொல்கிறதே தவிர, இயேசு தாழ்ந்தவர் என்றுச் சொல்லவில்லை. This shows ‘Order’ not ‘Inequality’.

4. பவுல் சொல்லும் ஆவிக்குரிய‌ ஒழுங்கு

பவுல் காட்டும் ஒழுங்கு:

தேவன் → கிறிஸ்து → விசுவாசிகள் → விசுவாசிகளை சேவிக்கும் ஊழியக்காரர்கள்

அதாவது:

தேவன்

கிறிஸ்து

விசுவாசிகள்

பாஸ்டர்கள் (சேவைக்காக)

5. இவ்வசனத்தின் வலுவான செய்தி

பவுல் சொல்லுவது: உங்கள் தலைவர்களைப் பற்றிப் பெருமைபடாதீர்கள்.

ஏனெனில்:

  • பாஸ்டர்கள் இருப்பது சேவை செய்வதற்காக‌ (Pastors serve Believers)

  • விசுவாசிகள் கிறிஸ்துவுக்குரியவர்கள் (Believers belong to Christ)

  • கிறிஸ்து தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார் (Christ belong to God)

6. ஒரு எளிய எடுத்துக்காட்டு

ஒரு ராஜ்யத்தை நினைத்துப் பாருங்கள்:

  • தேவன் = அந்த ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கிறார்

  • கிறிஸ்து = ராஜாவின் குமாரன்/இளவரசன்

  • விசுவாசிகள் = குடிமக்கள்

  • பாஸ்டர்கள் = குடிமக்களை கவனிக்கும் ஊழியக்காரர்கள்

ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களுக்காக ஊழியம் செய்யும் அரசு அலுவலக நபர்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல.

ஆனால், அரசு ஊழியர்கள் குடிமக்களை சேவிப்பார்கள் அல்லது அவர்களுக்காக உழைப்பார்கள். ஆனால், இவர்களுக்கு சம்பளத்தை யார் தருவார், ராஜாவும், இளவரசரும் தருவார்கள்.

7. இன்றைய சபைகளுக்கு ஒரு எச்சரிக்கை

இதுவரை பார்த்த வசனங்கள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கைகள்:

  • பாஸ்டர்களை கல்ட் போன்ற தலைவர்களாக மாற்றாதீர்கள்(Pastor worship)

  • மனிதர்களை மையமாக்கும் சபை (Celebrity Pastors)

  • “எங்கள் பாஸ்டர் – உங்கள் பாஸ்டர்” மனநிலை (My Pastor Your Pastor mindset)

  • இதனால் சபையில் உண்டாகும் பிரிவினை (Divisions in the Church)

சபையின் மையம்: கிறிஸ்து மட்டுமே.

வசனம் அர்த்தம்
பாஸ்டர்கள் உங்களுக்குரியவர்கள்அவர்கள் விசுவாசிகளை சேவிக்கின்றனர்
நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்மீட்பின் மூலம் கிறிஸ்துவுக்குரியவர்கள்
கிறிஸ்து தேவனுக்குரியவர்அவர் தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்


Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?