ஊழியர்கள் தங்கள் அழைப்பை இழந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் 10 அடையாளங்கள்

(10 Warning Signs a Pastor is Losing His Calling)

வேதாகமத்தில் பலர் அழைப்புடன் ஆரம்பித்து பின்னர் திசை மாறினார்கள்.

உதாரணம்:

  • சவுல் ராஜா (King Saul) – நல்ல முறையில் தொடங்கினார், ஆனால் இறுதியில் தேவனின் சித்தத்திலிருந்து விலகினார்.

  • தேமா (Demas) – பவுலுடன் ஊழியம் செய்தவர், ஆனால் உலகத்தை நேசித்து விலகினார் (2 தீமோத்தேயு 4:10).

அதனால் ஒவ்வொரு ஊழியரும் தம்மிடம் கேட்க வேண்டிய கேள்வி:

  • “நான் இன்னும் அழைப்பில் இருக்கிறேனா? அல்லது மெதுவாக என் அழைப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறேனா?”

ஊழியர்கள் தங்கள் அழைப்பை இழந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் 7 அடையாளங்கள்

(10 Warning Signs a Pastor is Losing His Calling)

1. ஜெப வாழ்க்கை மெதுவாக குறைகிறது

கர்த்தரின் உண்மையான அழைப்பு ஜெபத்தில் பிறக்கிறது.

ஆனால் ஊழியர்கள் கீழ்கண்ட காரணங்களால் அழைப்பை இழக்கிறார்கள்:

  • அதிக வேலை (Overloaded work)

  • அதிக நிர்வாகம் (Overloaded Management/Administration)

  • அதிக கூட்டங்கள் (More Meetings/Conferences)

  • ஆனால் குறைந்த ஜெபம் (Less Prayer Life)

ஒரு நாள் அவர் ஜெபமில்லாத ஊழியர் ஆகிவிடுவார்.

ஊழியம் ஜெபத்தில் ஆரம்பிக்கவில்லை என்றால் அது மனித முயற்சியாக மாறிவிடும்.

2. சுவிசேஷத்தின் மீது உள்ள தீ குறைகிறது

ஒரு உண்மையான மேய்ப்பன்:

  • ஆத்துமாக்களை பற்றி சிந்திப்பார்

  • இரட்சிப்புக்காக ஏங்கி, கர்ப்பவேதனைப்படுவார்

ஆனால் அழைப்பை இழக்கும் பாஸ்டர்:

  • சபை நிர்வாகத்தில் மட்டும் அதிகமாக கவனம் செலுத்துவார்

  • அதிகமாக கட்டிடம் கட்டுவார், நிர்வாகிப்பார்

  • நிகழ்ச்சிகள் : தன் நேரத்தை கூட்டங்களில் செலவழிப்பார்

ஆனால் ஆத்துமாக்கள் மறந்து போகும்.

3. சபை சேவை அல்ல, பதவி ஆகிறது

  • அழைப்புடன் இருக்கும் பாஸ்டர்: நான் வேலைக்காரன்/ஊழியம் செய்ய வந்தேன் என்பார்

  • அழைப்பை இழக்கும் பாஸ்டர்: “நான் தலைவன்” என்று பெருமையாக சொல்வார்.

அழைப்பை இழக்கும் பாஸ்டர்:

  • தனக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும் என்று விரும்புவார்

  • எல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்ப்பார்

  • யாராவது விமர்சித்தால், மாற்றத்தை சொன்னால் தாங்க மாட்டார், ஏற்றுக்கொள்ளமாட்டார்

4. வேதாகமம் பிரசங்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

  • அழைப்புடன் இருக்கும் பாஸ்டர்: வேதாகமத்தை தனக்காக வாசிப்பார் & தேவனின் குரலை கேட்பார்

  • அழைப்பை இழக்கும் பாஸ்டர்: ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்திற்கு மட்டும் வேதத்தை வாசிப்பார், அனுதினமும் தனக்காக வேதத்தை வாசிக்கமாட்டார்.

அதாவது: அவர் தேவனோடு பேசுவதில்லை.

5. தனிப்பட்ட பரிசுத்தம் குறைகிறது

ஒரு உண்மையான ஊழியர் கர்த்தருக்கு பயப்படுவார், தன்னை பரிசுத்தமாக எப்போதுமே காத்துக்கொள்வார், தொடர்ந்து முயற்சி எடுப்பார்.

  • மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரிந்தியர் 9:27)

ஆனால் அழைப்பை இழக்கும் ஊழியர்: பாவத்தை லேசாக எடுத்துக்கொள்வார் & இரகசியமாக பாவம் செய்வார், பரிசுத்தமாக வாழமுயல மாட்டார்.

6. பணம் ஊழியத்தை கட்டுப்படுத்த ஆரம்பிக்கும்

பணம் தேவையில்லாதது அல்ல, ஆனால் அபாயகரமானது:

ஒரு பாஸ்டர்:

  • பணத்தை ஊழியத்திற்கு பயன்படுத்தலாம்

  • அல்லது

  • ஊழியத்தை பணத்திற்காக பயன்படுத்தலாம்

இது தான் பெரிய வித்தியாசம். ஒரு ஊழியராக, மேற்கண்டவைகளில் எதனை பயன்படுத்துகிறார் என்பதைப் பொருத்து, அவரது அழைப்பு இன்னும் இருக்கிறதா? அல்லது அது காற்றில் பறக்கப்பட்டுவிட்டதா என்பதை அறியலாம்.

7. விமர்சனத்தை ஏற்க முடியாது

அழைப்புடன் இருக்கும் ஊழியர்:

  • யாராவது குறைகளை சுட்டிக்காட்டினால் ஏற்கிறார்

  • அவர் தொடர்ந்து ஆவிக்குரிய நல்ல காரியங்களை கற்றுக்கொண்டே இருப்பார்

அழைப்பை இழக்கும் ஊழியர்:

  • யாருடைய ஆலோசனைகளையும் கேட்க மாட்டார்

  • தன்னை விமர்சிக்கும் அனைவரையும் எதிரியாக பார்க்கிறார்

தன் மூலமாக ஒரு தவறு நடந்தால், அதனை தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு, தன்னை திருத்திக்கொண்டு வாழுபவர் தான், உண்மையான 'அழைப்பு உயிரோடுள்ள ஊழியரின் அடையாளம்'.

8. ஒப்பீடு மற்றும் பொறாமை அதிகரிக்கிறது

அழைப்புடன் இருக்கும் பாஸ்டர்:

  • “தேவன் என்னை எங்கு வைத்திருக்கிறாரோ அங்கு விசுவாசமாக இருப்பேன்.” என்றுச் சொல்லி வாழ்வார்.

அழைப்பை இழக்கும் பாஸ்டர்:

  • சபைகளோடு தன் சபையை ஒப்பிடுவார்

  • மற்ற பாஸ்டர்கள் மீது பொறாமைப்படுவார்

  • தன் சபை மற்ற சபைகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று நினைப்பார்

9. ஊழியம் சுமையாக தோன்ற ஆரம்பிக்கும்

ஒரு அழைப்புடன் இருக்கும் பாஸ்டர்:

  • கஷ்டத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்

ஆனால் அழைப்பை இழக்கும் பாஸ்டர்:

  • ஊழியம் அவருக்கு ஒரு சுமையாக தோன்றும், அவருக்கு இரட்சிப்பின் மகிழ்ச்சியோ, அழைப்பின் மீது நம்பிக்கையோ இருக்காது.

  • அவருக்கு சபை மக்கள் ஒரு தொந்தரவாக தோன்றுவார்கள்

10. தேவனுடைய பயம் குறைந்து மனிதரின் பயம் அதிகரிக்கும்

ஒரு உண்மையான ஊழியர்: தேவனுக்கு பயப்படுவார்.

அழைப்பை இழக்கும் ஊழியர்: மக்கள் என்ன சொல்வார்கள் என்று பயப்படுவார், சத்தியத்தை சொல்ல பயப்படுவார்.

ஊழியர்கள்/பாஸ்டர்களுக்கு ஒரு சுயபரிசோதனை:

இந்த கேள்விகளை நம்மிடம் நாமே கேட்க வேண்டும்:

  • நான் இன்னும் ஜெபத்தில் தொடர்ந்து தரித்து இருக்கின்றேனா?

  • நான் இன்னும் ஆத்துமாக்களை பற்றி அழுகிறேனா, ஜெபிக்கிறேனா?

  • நான் இன்னும் தேவனுக்கு பயப்படுகிறேனா?

  • நான் இன்னும் ஊழிய சேவை மனத்துடன் இருக்கிறேனா?

இறுதி அழைப்பு

ஒரு பாஸ்டர் ஒரே நாளில் விழுவதில்லை.

அவர் மெதுவாக:

  • ஜெபத்தை இழக்கிறார்

  • பரிசுத்தத்தை இழக்கிறார்

  • அழைப்பை இழக்கிறார்

ஆனால் நல்ல செய்தி, என்னவென்றால்:

தேவன் இன்னும் ஊழியர்களை அழைக்கிறார்.

  • ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.” (வெளிப்படுத்தல் 2:4–5)

இன்று கர்த்தர் கேட்கிறார்:

உங்களை அழைத்த அழைப்பில் இன்னும் நீங்கள் இருக்கிறீர்களா? உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?