2 கொரிந்தியர் 6: பரிசுத்தமே உங்கள் அழைப்பு! சமரசம் உங்கள் அழிவு - ஊழியர்களே எழும்புங்கள்
அன்பான சகோதர சகோதரிகளுக்கும், ஊழியர்களுக்கும்,
இன்று நீங்கள் கேட்கப் போகும் செய்தி
உங்களை ஆறுதல் அளிக்க மட்டும் இல்லை…
- அது உங்களை அதிரவைக்கும்!
- அது உங்களை மாற்றும்!
நாம் வாழும் காலம் மிகவும் ஆபத்தான காலம்…
- சபை இருக்கிறது… ஆனால் அங்கு பரிசுத்தம் குறைகிறது
- ஊழியம் இருக்கிறது… ஆனால் ஊழியத்தில் உலகத்தோடு சமரம் அதிகரித்துள்ளது
- ஆராதனை இருக்கிறது… ஆனால் சத்தியம் குறைகிறது
இன்று தேவன் கேட்கிறார்:
- “நீங்கள் உண்மையாக வாழ்கிறீர்களா? அல்லது நடிக்கிறீர்களா?”
- “நீங்கள் பரிசுத்தமாக வாழ்கிறீர்களா? அல்லது உலகத்தோடு சமரம் செய்துகொண்டு வாழ்கிறீர்களா?”
அப்போஸ்தலர் பவுலடியாரின் வார்த்தைகள், 2 கொரிந்தியர் 6ம் அதிகாரத்தில், ஒரு சக்திவாய்ந்த சத்தமாக தொனிக்கிறது:
- “இன்றே இரட்சிப்பின் நாள்!”
- “உங்களுக்கு கிடைத்த கிருபையை வீணாக்காதீர்கள்!”
சபையே…
இது ஒரு சாதாரண பிரசங்கம் அல்ல, இது ஒரு சுய வாழ்க்கையின் எழுப்புதலுக்கான அழைப்பு!
இன்று:
- இரகசிய பாவம் வெளிப்படும்
- உலக பாவ சமரசம் உடையும்
- பரிசுத்தம் மீண்டும் எழும்பும்
நீங்கள் தயாரா?
பரிசுத்தம் vs சமரசம்
I. கிருபையை வீணாக்காதீர்கள் (வசனம் 1–2)
அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். (6:2)
சபையே,
- நாளை மனந்திரும்புவேன் என்று சொல்லாதீர்கள்
- இன்னும் கொஞ்சம் காலம் உலகத்தில் சமரசம் செய்துக்கொண்டு என்று வாழ்ந்து விடுகிறேன் என்று நினைக்காதீர்கள்
இப்போதே மாற்றத்தின் நேரம்!
II. உண்மையான தேவசேவகரின் வாழ்க்கை (வசனம் 3–10)
பவுலடியார் தனது வாழ்க்கையை:
- துன்பங்களில்
- சிறைகளில்
- அவமானங்களில்
- துன்புறுத்தல்களில்
ஆனால் அதே நேரத்தில்:
- பரிசுத்தத்தில்
- அறிவில்
- பொறுமையில்
- உண்மையான அன்பில்
உண்மையான ஊழியர் மற்றும் பாஸ்டர்,
- மேடையில் அல்ல, தனது சாட்சியான பரிசுத்தமான வாழ்க்கை மூலமாக நிரூபிக்கப்படுகிறார்!
இந்த நம்பிக்கையினால் தான், பவுலடியார் இப்படி எழுதுகிறார்:
- மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
- அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,
- கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,
- சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
- கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,
- அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
- துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (6:4-10)
III. விசாலமான இருதயம் (வசனம் 11–13)
பவுல் சொல்லுகிறார்: “எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது”
உண்மையான தேவ ஊழியர்:
- மக்களை நேசிப்பார்
- சுயநலமில்லாதவர்
- சபையை கட்டியெழுப்புவார்
IV. சமரசத்திற்கு எதிரான அழைப்பு (வசனம் 14–18)
“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” (6:14)
இங்கே பெரிய எதிர்மறை கோடிட்டு காட்டப்படுகின்றது:
- ஒளி vs இருள்
- கிறிஸ்து vs பெலியால்
- தேவ ஆலயம் vs விக்கிரக கோயில்கள்
- விசுவாசி vs அவிசுவாசி
தேவன் சொல்லுகிறார்:
- “நீங்கள் உலகத்தோடு சமரசம் செய்யாமல், பிரிந்துவாருங்கள்”
- “நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்”
- “நான் உங்களுக்கு பிதாவாயிருப்பேன்”
உண்மையான தேவசேவகரின் தகுதிகள்
இந்த அதிகாரம் சொல்லும் தகுதிகள்:
ஊழியரின் ஆவிக்குரிய குணாதிசயங்கள்
- பரிசுத்தம்
- உண்மை
- அன்பு
- பரிசுத்த ஆவியால் நடத்தப்படுதல்
ஊழியர்களை தாங்கும் பெலன்
- துன்பங்களில் நிலைத்திருத்தல்
- அவமானத்திலும் நம்பிக்கையுடன் இருப்பது
ஊழியரின் பரிசுத்த வாழ்க்கை
- உலகத்தோடு சமரசம் செய்யாமல் வாழ்தல்
- தேவ ஆலயமாக வாழ்தல்
ஊழியர்களுக்கு தாங்கள் வாங்கிய பட்டங்கள், பெயர்களுக்கு முன்பாக போட்டுக்கொள்ளும், பட்டப்பெயர்கள் தகுதியல்ல, பரிசுத்தமே முதலாவது தகுதி!
உண்மையான மேய்ப்பருக்கான ஊக்கம்
மேய்ப்பரே…
- யாரும் உங்களை பாராட்டவில்லை என்றாலும்
- நீர் உண்மையில் நிலைத்திருக்கிறீர்கள் என்றால்
- யாருக்குமே தெரியாமல் கண்ணீர் சிந்துகிறீர்கள் என்றால்
தேவன் உங்களை காண்கிறார்! என்பதை மட்டும் மறக்கவேண்டாம்!
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
- உங்கள் கண்ணீர் வீணல்ல
- உங்கள் போராட்டமே உங்கள் சாட்சி
- உங்கள் விசுவாசமே உங்கள் பெலன்
இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், நீங்கள் பவுலடியாரின் ஊழிய அடிச்சுவடுகளில் நடக்கிறீர்கள்! என்று பொருள்.
பொய்யான ஊழியர்களுக்கு கண்டனம்
இந்த அதிகாரம் மறைமுகமாக பொய்யான ஊழியர்களை கண்டிக்கிறது:
பொய்யான ஊழியர்கள்:
- துன்பத்தை தவிர்க்கிறார்கள், தவிர்க்க முயலுவார்கள்
- பரிசுத்தத்தை விட்டுவிடுகிறார்கள்
- உலகத்தை நேசிக்கிறார்கள், அதோடு சமரசம் செய்துக்கொள்கிறார்கள்
பொய்யான ஊழியர்கள் தேடுவது:
- புகழ்
- பணம்
- மனிதர்களின் அங்கீகாரம்
ஆனால், அவர்கள் மறந்த சத்தியம் என்னவென்றால்:
- சிலுவை இல்லாமல் கிரீடம் இல்லை!
- பரிசுத்தம் இல்லாமல் அபிஷேகம் இல்லை!
இறுதி அழைப்பு (Altar Call)
இப்போது…
உங்கள் இருதயத்தை சோதியுங்கள்:
- இரகசிய மறைவான பாவம் உள்ளதா?
- உலகத்தோடு சமரசம் செய்துகொள்கிறீர்களா?
- வெளியில் ஒரு வாழ்க்கை, உள்ளே வேறு வாழ்க்கையா?
இப்போதே திரும்பி வாருங்கள், மனந்திரும்புங்கள்!
இப்பொழுதுதே தீர்மானியுங்கள்:
- சமரசமா? அல்லது பரிசுத்தமா?
- உலகமா? அல்லது கிறிஸ்துவா?
பரிசுத்தமானவர்களே தேவனுடைய மகிமையை காண்பார்கள்!
இப்போது…
இந்த வார்த்தையை கேட்ட பிறகு நீங்கள் மாறாமல் இருக்க முடியாது…
நீங்கள் இரண்டு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்:
- பரிசுத்தம்
- அல்லது சமரசம்
சபையே…
நீங்கள் எவ்வளவு காலம்
இரண்டு வாழ்க்கை வாழப்போகிறீர்கள்?
- வெளியே ஒரு கிறிஸ்தவன்
- உள்ளே ஒரு சமரசமான மனிதன்?
இன்று தேவன் அழைக்கிறார்:
“பிரிந்துவா… பரிசுத்த வாழ்க்கை வாழ வா … நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்!”
இப்போதே…
- உங்கள் கண்களை மூடுங்கள்
- உங்கள் இருதயத்தை திறந்து சொல்லுங்கள்:
“கர்த்தாவே…
நான் திரும்பிவருகிறேன்
நான் சமரசத்தை விட்டுவிடுகிறேன்
நான் பரிசுத்தத்தை தேர்ந்தெடுக்கிறேன்
என்னை சுத்திகரித்தருளும்
என்னை நிரப்பும்!”
- பரிசுத்தம் இல்லாமல் தேவனை காண முடியாது
- சமரசம் உள்ளவர்களுக்கு அபிஷேகம் நிலைக்காது
பரிசுத்தமே உங்கள் அழைப்பு! சமரசம் உங்கள் அழிவு!

Comments
Post a Comment