1 கொரிந்தியர் 16: முதிர்ந்த சபையின் அடையாளங்கள்
பிரசங்க தலைப்பு: முதிர்ந்த சபையின் அடையாளங்கள்
(1 கொரிந்தியர் 16)
அறிமுகம் (Introduction)
அன்பானவர்களே, இன்று பல சபைகள் வளர்ச்சி பற்றி பேசுகின்றன, அவர்களின் படி, சபை வளர்ச்சி என்றால்:
- கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும்?
- வருமானம் அதிகமாக இருக்கவேண்டும்?
- நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கவேண்டும்?
ஆனால் பவுல் 1 கொரிந்தியர் 16வது அத்தியாயத்தை முடிக்கும் போது, ஒரு அற்புதமான விவரத்தை கூறுகிறார், அவர் “சபையில் நடக்கவேண்டிய அதிசயங்கள்” பற்றி பேசவில்லை, “முதிர்ச்சி” பற்றி பேசுகிறார்.
ஒரு சபை வளரலாம், எண்ணிக்கை கூடலாம்… ஆனால் அது முதிர்ச்சியடைய வேண்டியது அவசியம்!
1. முதிர்ந்த சபை ஏழைகளுக்கு, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யும்
வசனம்: 1–2
பவுல் சொல்லுகிறார்:
ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப கொஞ்சம் பணத்தை ஏழைகளுக்காக, தேவையுள்ள மற்ற ஊழியங்களுக்காக ஒதுக்கி வைத்துக் கொடுக்க வேண்டும்.
கொடுப்பது:
- உணர்ச்சியால் அல்ல
- அழுத்தத்தால், கட்டாயத்தினால் அல்ல
அது:
- திட்டமிட்டது
- ஒழுங்கானது
- விசுவாசமானது
சரியாக கொடுக்கும் சபை, தேவையுள்ளவர்களுக்கு சரியாக சபை - ஜீவனுள்ள சபையாக இருக்கும்!
2. முதிர்ந்த சபை வாய்ப்புகளை உணர்கிறது
வசனம்: 9
“ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்”
தேவன் திறக்கும் வாசலில் சவால்கள் இருக்கும்.
பலர் என்ன செய்கிறார்கள்?
- சிரமம் வந்தால் — “இது தேவன் திறந்து கொடுத்த வாசல் அல்ல என்று கருதிவிடுகிறார்கள்”
ஆனால் உண்மை:
வாய்ப்பு கிடைக்கும் + எதிர்ப்பும் இருக்கும் = தேவன் கொடுக்கும் ஊழியம்
உங்களுக்கு எதிர்ப்பு இல்லையென்றால், உங்களால் சமுதாயத்தில் தாக்கமும் இருக்காது!
3. முதிர்ந்த சபை தேவனுடைய ஊழியக்காரரை மதிக்கிறது
வசனம்: 10–11
பவுல் Timothy பற்றி சொல்லுகிறார் —
- தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.
இன்று:
- புகழ்பெற்ற ஊழியர்களை மட்டுமே மதிக்கிறோம்
- தாழ்மையோடு ஊழியர் செய்பவர்களை மதிக்கிறதில்லை, ஆதரிப்பதில்லை
தேவனுடைய ஊழியக்காரரை உயர்த்தும் சபை தான் உயர்வடையும்!
4. முதிர்ந்த சபை விசுவாசத்தில் நிலைத்திருக்கிறது
வசனம்: 13
பவுல் 4 கட்டளைகள் கொடுக்கிறார்:
- விழித்திருங்கள்,
- விசுவாசத்திலே நிலைத்திருங்கள்,
- புருஷராயிருங்கள் (தைரியமாக இருங்கள்)
- திடன்கொள்ளுங்கள்விழித்திருங்கள்
பலவீனமான கிறிஸ்தவர்கள் — பலவீனமான சபையை உருவாக்குவார்கள்.
5. முதிர்ந்த சபை தாழ்மையுடன் சேவை செய்கிறது
வசனம்: 15
அவர்கள்:
- பதவியை தேடவில்லை
- ஊழியம் செய்தார்கள்
பதவி அல்ல — அர்ப்பணிப்பு தான் உண்மையான ஊழியம்!
6. முதிர்ந்த சபை இயேசுவை ஆழமாக நேசிக்கிறது
வசனம்: 22
“ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்”
இது மிகவும் வேதனை தரக்கூடிய வலியான வார்த்தை!
நாம் நாம் கீழ்கண்டவைகளை செய்கிறோம்:
- ஊழியம்
- ஆராதனை
- நமக்கு வேத அறிவும் உள்ளது
ஆனால்…
இயேசுவின் மீது அன்பு இல்லையெனில் — அது வெறுமை!
கிறிஸ்தவத்தின் மையம்: இயேசுவை நேசிப்பது!
முடிவு (Conclusion)
பவுல் முடிக்கிறார்:
“கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்”
நமக்கு சத்தியமும் இருக்க வேண்டும்
அன்பும் இருக்க வேண்டும்
சபைக்கு சவால் (Altar Call)
உங்கள் வாழ்க்கையை ஆய்வு செய்யுங்கள்:
- நான் கொடுப்பவனா அல்லது வாங்குபவனா?
- நான் விசுவாசத்துக்குள் நிலைத்திருக்கிறேனா அல்லது சலனப்படுகிறேனா?
- நான் ஊழியக்காரரை மதிக்கிறேனா அல்லது விமர்சிக்கிறேனா?
- நான் இயேசுவை உண்மையாக நேசிக்கிறேனா?
முதிர்ந்த சபை பூரணமானது அல்ல… ஆனால் சரியான திசையில் வளர்கிறது!

Very good
ReplyDelete